பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் வனாயினும், தடத்த நிலையில் உயிர்களின் பொருட்டுப் பலப்பல உருவும் தொழிலும் பெயரும் உடையவனாகின்றான் என்பதை அறிய முடிகின்றது. இதனை அநுபூதிநிலையில் தெளிந்த மணிவாசகப் பெருமான், ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமிலார்க் காயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேனம் கொட்டாமோ?* என்று அருளிச் செய்து உள்ளதை ஈண்டு நினைத்தல் தகும். இவை தடத்த நிலையே யன்றி கற்பனை யன்று என்பது தெளியப்படும். (5) படைத்தல் காத்தல் அழித்தல்-விளக்கம் இறைவன் இந்த முத்தொழில்களைச் செய்வது எதன் பொருட்டு, என்பதைக் காண்போம். கம்பன் போன்ற கவிஞர்கள் இறைவன் இவ்வாறு செய்வதை அலகிலா விளையாட்டு’ என்கின்றனர். மணி வாசகப் பெருமானின், காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி’ (விளையாடி-விளையாடுபவனே) என்ற அருள் மொழியாலும் இதனை அறியலாம். இஃது இறை வனுடைய வரம்பிலாற்றலுடைமையால் நிறைவேறுகின்றது. உயிர்கள் இம்மை மறுமை, வீடு, என்னும் நலன்களைப் பெறுதலே முதல்வனது தொழிலின் பயனாகும் என்பது ஈண்டு உளங் கொள்ளத் தக்கது. இஃது இறைவனுடைய வரம்பிலாற்ற திருவாச திருத்தெள்ளேனம் 26. கம்பரா. காப்பு - 1 - - 27. திருவா. திருவெம், 12 அடி 4. ஐந்தொழில் ஆற்றுதல் இறைவனுக்கு விளையாட்டு போன்றது.