பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்” என்று அருளிச் செய்துள்ளமையையும் காணலாம். உலகம் காரியப்பொருள் என்பதையும் அதற்கு மாயை காரணம் என்பதையும் நாம் நன்கு அறிவோம். மாயையினின்று உலகைத் தோற்றுவித்து உயிர்கட்குக் கூட்டுவிப்பதே படைத்தல் ஆகும் என்பதைத் தெளியலாம். ~ மாயையாகிய சடப்பொருளிலிருந்து தோற்றவிக்கப் பெறும் உலகம் தனு, கரணம், புவனம், போகம் என நான்கு வகைப்படும். தனு என்பது உடம்பு கரணம் என்பது மனம் முதலிய உட்கருவிகள் (அந்தக் கரணங்கள் புவனம் என்பது உலாவும் இடம்; போகம் என்பது நுகர்ச்சிப் பொருள். இறைவன் உயிர்களை ஒரே வகையாகப் படைக்காமல் பலவகையான வேற்றுமைகள் அமையப் படைத்தற்குக் காரணம் அவ்வவற்றின் வினைகளே என்று சமயவாதிகள் முழங்குவதை நாம் அறிவோம். இந்த வினையே மேலே குறிப்பிட்ட விருப்பமாகும். விருப்பத்திற்கு ஏற்பப் படைத்த லால் வினை நீங்குவதற்குரிய வழியை அடைவிப்பது படைத் தலின் பயனாகின்றது. காத்தல்: இறைவன் அருளிய தனு கரண புவன போகங்களை அழியாமல் நிறுத்திப் பயன்படச் செய்வதே 'காத்தல் ஆகும். ஆகவே, உயிர்கள் தம் விருப்பத்தை நிறைவேற்றுவதற்குரிய வழியில் நின்று அதனை அங்ங்னமே நிறைவித்துக் கொள்ளத் துணைபுரிவதே காத்தல் என்பது தெளிவாகின்றது. வினை நீக்கத்திற்கு உரித்தாகிய வழியில் நின்று வினை நீக்கப் பெறுதலே காத்தலின் பயனாகின்றது. அழித்தல் இக்கூறியவாறு இம்மை மறுமை உலகங்க ளில் இன்பங்களை நுகர்வதற்குரிய உடம்புகளை எடுத்துப் 29. அப். தேவா. 5.23:1