பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 - சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் என்று கூறியிருத்தலால் தெளியலாம். தாயுமானவரின் கொள்கையும் சுத்தாத்துவிதம் என்பதனை, அத்துவிதம் பெறும்பேரென்று அறியாமல் யான்எனும்பேய் அகந்தை யோடு மத்தமதி யினர்போல மனங்கிடப்ப இன்னம்இன்னம் வருந்து வேனோ?” என்ற அவர் வாக்காலேயே அறியலாம். மூன்று உவமைகள் சுத்தாத்துவிதக் கொள்கையை விளக்க மூன்று உவமைகள் கூறப்பெறும். அவற்றை ஈண்டு விளக்குவோம். (அ) இறைவன் உயிர்களோடு கலப்பினால் ஒன்றாய் நிற்றற்கு உடலும் உயிரும்போல்’ என்று உவமை கூறுவது வழக்கம். உடலில் உயிர், அது எனத் தான் என வேற்றுமை யின்றி அதுவேயாய்க் கலந்து நிற்றலை மெய்கண்டார் உடலுக்கு இட்ட பெயரை, அதாவது சாத்தன், கொற்றன் முதலிய பெயர்களைச் சொல்லி அழைக்கும்போது ‘உயிர் தன்னையே அழைத்ததாகக் கொண்டு ஏன்? என்று கேட்பதை எடுத்துக்காட்டி விளக்குவார். இங்கு உயிர் உடம்பெனத் தானென வேற்றுமையின்றி அபேதமாய் நிற்றல் கண்டுதெளிய லாம். இதனை மேலும் விளக்கலாம். இங்கு உயிர், உடலோடு ஒட்டி நிற்கும்போது உயிர் உயிரே உடம்பு உடம்பே, உடம்பு உயிர் ஆகாது உடம்பும் உயிர் ஆக மாட்டாது. அவ்வாறா யினும் உயிர் உடம்பாயும் அதனின் வேறாயும் நிற்கும், உடம்பு அங்ங்ணம் நில்லாது. அதுபோல முதல்வன் முதல்வனே உயிர் உயிரே, முதல்வன் உயிராக மாட்டான், உயிர் முதல்வனாக 37. மேலது - ஆசையெனும் - 2.