பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் அருளாசிரியர்களின் குறிப்புகள் இவ்வாறு இறைவன் உலகத்தோடு ஒன்றாயும், வேறாயும், உடனாயும் இருத்தலை மெய்கண்டாருக்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பிருந்த ஞானசம்பந்தப் பெருமான் தமது திருவிழிமிழலைத் திருப்பதிகத்துள் கூறியுள்ளமை ஈண்டு உளங்கொள்ளத் தக்கது. ஈறாய்முதல் ஒன்றாய்.இரு பெண் ஆண்குணம் மூன்றாய் மாறாமறை நான்காப்வரு பூதம் அவை ஐந்தாய் ஆறாய்சுவை ஏழோசையொடு எட்டுத்திசை தானாய் வேறாய்உடன் ஆனான்இடம் விழிம்மிழ லையே' கேவலாத்துவிதம் எனப்படும். இறைவனும் உயிர்களும் வேறே என்பவர் ஒளியும் இருளும் போல்’ என்று உவமை கூறுவர். இவர்கள் துவிதிகள்; இவர்கள் பேதவாதிகள்; இவர்தம் கொள்கை பேதவாதம். இவர்களது சமயம் ‘துவைதம்’ என்பது, 'இறைவனும் உயிரும் ஒன்றும் வேறும் என்பவர் சொல்லும் பொருளும் போல்’ என்று உவமை கூறுவர் இவர்கள் பேதவாதிகள். இவர்தம் கொள்கை ‘பேதாபேதம்’ என்பது; இது பேதம், அபேதம்’ என்ற இரண்டையும் கொண்டு நிற்றல். 'சொல்லும் அதன் 'பொருளும் வேறு வேறாயிருப்பினும் சொல்லைச் சொன்னவுடன் அதன் பொருள் உடன் தோன்றுதலால், ஒன்றாகவும் உள்ளன என்பது இவர்தம் கருத்து. இவர்கள் தம் கொள்கை நிலைபெறுவதற்கு பிரம்மம் விசிட்டத்தினால் அத்துவிதம் என, அத்துவிதம்’ என்பதனோடு விசிட்டம்’ என்ற ஒரு சொல்லைச் சேர்த்துப் பொருள் கொள்வர். இதனால் இவர்தம் கொள்கை விசிட்டாத்துவிதம் என்று சொல்லப்பெறும். மெய்கண்டார் தம் கொள்கையின் பொருட்டு அத்துவிதம்' என்பதனோடு யாதொரு சொல்லையும் சேர்க்காமல் அப்படியே வைத்துப் பொருள் கொள்வதால் அவரது கொள்கை சுத்தாத்துவிதம் என்று வழங்குகின்றது. - 40. சம்ப. தேவாரம் 1.11:2