பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் 1 (பதி) 6S நிற்றல் போல, உலகமாகிய செயப்படு பொருளுக்குக் கருத் தாவாகிய இறைவன் அதனின் வேறாய் நிற்காது அத்துவித மாய் நின்றே தொழில் நடத்துவன்" என்பதும் தெளியப்படும். இன்னும் “படைத்துக் காத்து அழிக்கப்படும் உலகத்தில் பயன் பெறுவன உயிர்களே; இதனால் அவை குயவன் செய்யும் குடம் முதலியவற்றைப் பெற்றுப் பயன் அடையும் மக்கள் போல்வனவாகும். குயவன் அம்மக்களின் வேறாய் இருத்தல்போல, இறைவன் உயிர்களின் வேறாய் நில்லாது அவற்றோடு அத்துவிதமாய் நின்றே அவற்றின் பொருட்டுத் தனது தொழிலைச் செய்வன்' என்பதும் இதனாலே விளங்கும். () இறைவன் உலகத்தைச் செயற்படுத்தும் முறை பேரறிவும் பேராற்றலுமுடைய இறைவன் தன் தனிப் பெருங்கருணையால் ஆருயிர்கட்கு நலம் செய்தல் வேண் டும்’ என்னும் கருத்தோடு படைத்தல் முதலியவற்றைச் செய்யும் முறையில் சேதநப் பிரபஞ்சத்தையும் அசேதநப் பிரபஞ்சத்தையும் ஒருபடித்தாய்ப் படைக்காமல் வெவ்வேறு விதமாகப் படைத்துள்ளான். சேதநப் பிரபஞ்சத்தில் மக்கள், பறவை, விலங்கு, தாவரம் என்னும் பல்வேறு இனங்கள் இங்கனம் படைக்கப் பெறும் ஓர் இனத்துள்ளும் உயர்ந்தோர்-தாழ்ந்தோர் நிறை உறுப்பினர்-குறை உறுப்பினர். செல்வர்-வறிஞர், கருடன்ஊர்க்குருவி, புலி-மான், பசு-எருமை, புல்-மரம் என்ற எத்துணையோ வேறுபாடுகள் காணப்பெறுகின்றன. இவற்றால் உறவும்-பகையும், வாழ்வும்-தாழ்வும் இன்பமும்-துன்பமும், சிறிதுகாலம் வாழ்வனவும்-நெடுங்காலம் வாழ்வனவும், வாழ்வதற்குரிய காலம் முழுதும் வாழாது இடையிலே