பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$6 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் அழிவனவுமாய்-இங்ங்னம் பல்வேறு விதமாக, பல படியாகக் காணப் பெறுகின்றன. - அசேதநப் பிரபஞ்சத்தில் மண்ணுலகம்-பொன்னுல கம், ஒளியுலகம்-இருள் உலகம், காடு-நாடு, மலை-மடு என்று இங்ங்ணம் பலதிறப்பட்டனவாகவே காணப்படுகின்றன. ஆகவே, இவற்றையெல்லாம் ஆக்கியும் அளித்தும் அழித் தும் நடத்துகின்ற இறைவன் எந்த ஒழுங்கில் எந்த நியதிப்படி செய்கின்றன? இதனால் யாருக்கு என்ன பயன். உயிர்கள் பயன் அடைந்தால், அவை எவ்வாறு பயன் அடைகின்றன? -இவற்றை விளக்க வேண்டும். படைத்தலின் நோக்கம்: இறைவன் இக்கூறியவாறு படைத்தல் தன் கருத்துப்படி அன்று உயிர்களின் கருத்துப்படி யேயாகும். அது மண்ணிலிருந்து பாண்டங்களைச் செய்யும் குலாலன் அவற்றைத் தன் கருத்துப்படி குடம், சால், பானை, கரகம், முதலாகவும், அவற்றைச் சிறியனவும் பெரியனவுமாக வும் பலபடச் செய்தல் போதலாகும் என்று சொல்லி வைக்க லாம். இவ்வாறு செய்யும் ஒழுங்கு முறையை வினை அல்லது கன்மம் என்று விளக்குவர் சித்தாந்திகள் அவரவர் வினைக் கேற்றவாறு படைத்தல் இறைவனின் நடுவுநிலையேயன்றி நடுவுநிலை பிறழ்ந்த நிலையாகாது. வேண்டுவார் வேண்டுவதை முன்னின்று கொடுத்தல் கருணையேயன்றி வன்கண்மை ஆகாது. - - வேண்டத் தக்கது அறிவோய்நீ வேண்ட முழுதும் தருவோய்நீ வேண்டும் அயன்மாற்கு அரியோய்நீ வேண்டி என்னைப் பணி கொண்டாய்" என்று மணிவாசகப் பெருமான் கூறுவது இந்த நியதியைத் 44. திருவா. குழைத்த பத்து