பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள்- 1 (பதி) 67 தான் என்று கருதலாம். இவ்வாறு இறைவன் தனது செயல் களை வினைவழியே செய்வது வினையின் ஆற்றலைக் கடந்து தன் விருப்பின் வழி நடக்கமாட்டாமையால் அன்று. பல்லுயிர்களின் பயன்கருதியேயாகும். செங்கோல் நடத்தும் அரசர்கள் தங்கள் செயல்களை அரசியல் முறைப்படி நடத்துதல் போலாகும் இறைவன் வினைவழியே தன் செயலை நடத்துவதும் என்று இதனை ஒருவாறு விளக்கலாம். வினையையும் அரசியல் நெறியையும் ஒப்பிட்டு அறியின் இது தெளிவாகும். ஐயமும் விளக்கமும் உயிர்கள் உடம்பைக் கொண்டு தானே வினையைச் செய்தல் கூடும். உடம்பு இல்லாதபோது வினை ஏது? வினை இல்லாதபோது உடம்புகள் எங்ங்னம் அமையும்? இந்த ஐயம் எல்லோருக்கும் ஏற்படுவது தான். இதனை விளக்குவோம். இது விதை முதலா? மரம் முதலா? என்ற ஐயத்தைப் போன்றது. மரத்திற்குக் காரணம் விதை விதைக்குக் காரணம் மரம். இவ்விரண்டில் ஒன்று இல்லாத போது மற்றொன்று இல்லை என்பது தெளிவு. ஆனால் இவை முதன்முதலில் எப்படி உண்டாயின என்ற வினாவிற்கு ஒருவராலும் விடை அறியக்கூடியதாக இல்லை. இரண்டில் இன்னது தான் முதல் என்று உறுதிப்படுத்துவதற்குத் தக்க சான்றுகள் இல்லையாயினும் விதையினால் மரமும் மரத்தினால் விதையும் உண்டாகின்றன என்ற உண்மையை மறுக்க முடியாது. இதுபோலவே வினையும் உடம்பும் ஆகிய இரண்டில் இன்னது முதல் என்பதை உறுதிப்படுத்த இயலாவிடினும், இரண்டில் ஒன்று எவ்வகையிலோ முதலில் தோன்றியிருக்க வேண்டும்; அதன்பின்னர் அவர் காரண காரியத் தொடர்பால் ஒன்றால் மற்றொன்று தோன்றித் தொடர்ந்து வருகின்றன என்றுதான் நாம் முடிவு செய்தல் வேண்டும். -