பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் உயிர்களின் இயல்பு உயிர்கள் இன்பத்தை விரும்புவ தன்றி துன்பத்தை விரும்புவதில்லை; அங்ங்னமே, அறிவும் ஆற்றலும், உடல் உறுப்பும் அழகும், செல்வமும் வாழ்நாளும் குறைந்து நிற்றலையும் விரும்புவதில்லைதான். ஆயினும் அக்குறைபாடுகளைத் தரும் காரணத்தை விரும்புகின்றன. பிறப்பே துன்பம் உடையது; அதனைத் தருவது இறைவனின் விருப்பமன்று. ஆயினும், உயிர்கள் இவ்வுலகத்தில் ஏதோ இன்பம் இருப்பதாக நினைத்து அதனை நுகர்தற்குப் பிறப்பை எடுக்க விரும்புகின்றன. அவ்வின்பமும் பலவகைப்படுவதாக அமைகின்றது. ஆயின், உலக இன்பமோ முட்செடியில் உள்ள மலர் போன்றுள்ளது. அதாவது, பெருந் துன்பத்தின் பயனாகச் சிறிது இன்பம் விளைகின்றது. முட்கள் பலவற்றால் கீறப்பட்ட பின்பே முட்செடியில் உள்ள ஒரு மலரைப் பறிக்க முடிவது போல, உலகத்தில் துன்பங்கள் பலவற்றை அது பவித்த பின்பே சிறிது இன்பத்தைப் பெற முடியும் என்ற நிலை அமைகின்றது. ஆகவே, உலக இன்பத்தை விரும்புவதே துன்பத்தை விரும்புவதாய் அமைகின்றது. இன்னும் உயர் பிறப்பை எடுத்த உயிர்கள் தாழ்பிறப்பை விரும்புவதில்லை. எனினும் தாழ்பிறப்பை எடுத்த உயிர்கள் உயர்பிறப்பை விரும்புகின்றன. ஆயினும், எந்தப் பிறப்பிலும் துன்பம் இல்லாமல் இல்லை. தீங்குபயவாதிருத்தல் ஓர் உயிர் துன்பத்தை விரும் பாமல், இன்பத்தை விரும்புவது போலவே , பிற உயிர்களும் துன்பத்தை விரும்பாது இன்பத்தையே விரும்புகின்றன என்பதை உணர்ந்து பிற உயிர்கட்குத் தீங்கு செய்யாதிருத்தல் வேண்டும். அப்படித் தீங்கு செய்தால் தீங்கு செய்த உயிர் களை ஒறுப்பது இறைவனின் கடமையாகின்றது. தீங்கிற்குரிய ஆறுத்தலே இழிபிறப்பும் உடற்குறையும், வறுமையும் ஆக இறைவன் தருகின்றான். ஆயினும், இவையனைத்தையும்