பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் ஆற்றுகின்ற செயல்களும் அவனது அருளாலன்றி வேறில்லை. இவற்றை, உருவருள்; குணங்க ளோடும் உணர்வருள் உருவில் தோன்றும் கருமமும் அருள்:அ ரன்றன் கரசர ணாதி சாங்கம் தரும்அருள்; உபாங்க மெல்லாம் தான்அருள்; தனக்கொன் றின்றி அருள்உரு உயிருக் கென்றே ஆக்கினை அசிந்தன் அன்றே" என்பது அருணந்தியின் திருவாக்கு. இத்திருப்பாடலில் 'இறைவன் உருவங்கொள்ளுதல் தன்பொருட்டன்றி உயிர் களின் பொருட்டேயாகும் என்று நுவலப் பெற்றிருத்தலைக் காணலாம். அஃதாவது, எச்செயலையும் அவன் உருவம் இன்றியே செய்யவல்லவனாயினும், உருவம் கொள்ளாவிடில் உயிர்கள் அவனை அறியமாட்டா என்பது பற்றியே இறைவன் உருவங் கொள்ளுகின்றான் என்ற விளக்கமும் இதில் குறிப்பாகப் புலப்படுத்தியிருப்பதைக் கண்டு தெளியலாம். உருவம் இன்றியமையாமை தியானத்திற்கு உருவம் மிகவும் இன்றியமையாதது. உருவம் இல்லாத பொருளை உயிர்கள் மனத்தால் நினைக்கவும் இயலாது. ஆதலின் அவை தன்னை நினைந்து வாழ்த்தியும் வணங்கியும் உய்தல் வேண்டும் என்னும் பெருங் கருணையால் இறைவன் பலவகைத் திருமேனிகளைக் கொள்ளுகின்றான் என்பது அறியப்படும்.” உருவமின்றி இவற்றைச் செய்தல் இயலாது. அவ்வாறு செய்ய முயலுங்கால் இறைவனையன்றி வேறொன் றையே நினைக்க வேண்டி வரும். அதாவது கடவுள் என்ற 50. சித்தியார் 1.47 - - 51. வைணவத்திலும் உருவம்பற்றியும் இதே கருத்து உண்டு.