பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 1 (பதி) - - 75 சொல்லையோ அல்லது கடவுளைப் பற்றிய பாடலின் வடிவங் களையோ, பாடலைப் பாடிய அல்லது இறைவனைப்பற்றி உபதேசித்த ஆசிரியரையோ நினைக்க வேண்டி வருமே யன்றி இறைவனை நினைத்தல் இயல்ாது. இதனால் இறைவனுக்கு உருவம் இன்றியமையாததாகின்றது. உருவ வகைகள் வடிவம் என்பன யாவும் அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூவகையினுள் அடங்கும். அருவம் என்பது காட்சியளவையால் அறியப்பெறாது கருதல ளவையால் அறியப்பெறுவது. (எ-டு) ஆகாயம் முதலியவை. அருவுருவம் என்பது ஒருகால் காட்சியால் அறியப்பட்டும், பிறிதொருகால் காட்சியால் அறியப் பெறாமலும் இருப்பது. (எ-டு) தீ முதலியவை. காற்று கண்ணுக்குப் புலனாகாவிடினும் ஊற்றுணர்வினுக்குப் புலனாவதால் உருவமுடையதாகக் கொள்ளப்படும். கண்ணுக்குப் புலனாகாமைபற்றி அருவம் எனக் கொள்ளலும் உண்டு. இறைவனுடைய திருமேனிகளை மூன்று வகையாகப் பிரித்துப் பேசும் சைவ சித்தாந்தம். இறைவன் தன்பொருட்டு யாதொரு வடிவத்தையும் வேண்டாதவன் ஆருயிர்களின் பயன் கருதியே இந்த மூவகை வடிவங்களையும் மேற் கொள்ளுகின்றான். - : (அ) அருவநிலை இறைவன் உலகை நோக்காது தன் நிலையில் நிற்கும் பொழுது ‘சிவன் என வழங்கப் பெறுவான். இதுவே சொரூப நிலை எனப்படும் உண்மை நிலையாகும். இந்நிலையில் அவன் பரமசிவன், சொரூப சிவன், சுத்தசிவன் என்றெல்லாம் பேசப்பெறுவன். இந்நிலையில் அவனது சக்தி பராசக்தி எனப் பெயர் பெறுகின்றது. இந்த நிலையில் இறைவனுக்கு யாதொரு வடிவமும் இல்லை. இதுவே இவனது அருவநிலை. - -