பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் செய்யும்போது அவனது சக்தி மகேசுவரியாய் நிற்கும். இறைவன் கொள்ளுகின்ற உருவத்திருமேனிகள் யாவும் இந்த மகேசுவர நிலையின் வேறுபாடுகளே. ஏகபாதர், அர்த்தநாரீசு வரர், உமாசகாயர்,சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், நடராசர் முதலான மகேசுவர மூர்த்தங்கள் இருபத்தைந்து எனக் கணக்கிடப் பெற்றுள்ளன. - -- - இவைதவிர, அடியார்கட்கு ஆங்காங்குத் தோன்றியரு ளிய வடிவங்களும், பலவாகும். தேவர்கள் பொருட்டும், ஏனைய உலகத்தார் பொருட்டும், திரிபுரத்தை எரித்தது முதலியனவும் சனகாதி முனிவர்கட்கு தட்சிணாமூர்த்தியாய் இருந்து ஞானத்தை அருளியது முதலியனவும் இம்மகேசுவர மூர்த்தமாதல் அறிந்து தெளியப்படும். - . . . (இ) அருவுருவம் இறைவன் அருளலைச் சதாசிவனாய் நின்று செய்யும்பொழுது அவனது சக்தி மனோன்மணியாய் நிற்கும். இறுதியில் குறிப்பிட்ட நிலை செயலில் புகும் நிலையேயல்லது செயல் ஆற்றும் நிலையன்று. அதனால் இது பொதுவாய் நின்ற அருவமும் ஆகாமல், பின்பு சிறப்பாய் வரும் உருவமும் ஆகாமல், அருவுருவத் திருமேனியாய் அமையும். இவ்வடிவமே ஒளிப்பிழம்பான சிவலிங்கத் திருமேனியாகும். ஐந்தொழில் பஞ்சகிருத்தியம் என்று பேசப்பெறும். இவற்றுள் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றும் அசேதநப் பிரபஞ்சமாகிய சட உலகத்தின்மீதும், மறைத்தல், அருளல் ஆகிய இரண்டும் சேதநப்பிரபஞ்சமாகிய உயிர் களின்மீதும் செய்யப்பெறுவனவாகும் என்பதைப் பிரித்து நோக்கித் தெளிவு பெறலாம். இந்த ஐந்தொழில்களும் ஒருவகையில் அருள்தொழில் களேயாகும். யாங்ங்னம் என்பதைக் காண்போம். உலகத்தை