பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் முழுவதையும் அழித்தபின்னர் மீளவும் தோற்றுவித்தற்கு ஆவனசெய்தல் சூக்கும ஐந்தொழிலாகும். உயிர்கள் தம் உடம்பைக் கொண்டு பொருள்களை அறிந்து அநுபவிக்குங் கால் அவற்றின் அறிவுக்கு அறிவாய் நின்று அவற்றை அநுபவித்து நிற்றல் அதிசூக்கும ஐந்தொழிலாகும். இறுதி யில் குறிப்பிட்ட அதிசூக்கும ஐந்தொழிலை மெய்கண்டார் சிவஞானபோதம் ஆறாம் சூத்திரத்தில் கூறியுள்ளார். அதில் கூறியவாறு இறைவன் அறிவியாதொழியின் உயிர்கள் எதையும் அறியமாட்டா. (9) இறைவனின் திருமேனியற்றி மேலும் சில கருத்துகள்: இறைவனுடைய உருவத்திருமேனி போகவடிவம், யோகவடிவம், வேக வடிவம் என்று மூவகைப்படும். போக வடிவம், உலக இன்பத்தைத் தருதற்பொருட்டு மணக்கோலம் கொள்ளுதல் போன்றவை. யோகவடிவம் ஞானத்தைத் தருதற்பொருட்டுக் குருமூர்த்தியாய் எழுந்தருளியிருத்தல் போன்றவை. வேகவடிவம் உலகத்தார்க்கு உண்டாகும். துன்பத்தைப் போக்கப் போர்க்கோலம் கொள்ளுதல் போன்றவையாகும். இறைவன் போகவடிவம் கொண்டாலல்லது உயிர்கட் குப் போகம் அமையாது; யோகவடிவம் கொண்டாலல்லது உயிர்கட்கு ஞானம் உதியாது; வேகவடிவம் கொண்டாலல்லது உலகிற்குவரும் துன்பம் நீங்காது. இறைவன் சனகாதி முனிவர் பொருட்டு யோகியாய் இருந்த காலத்தில் யோகியாய் இருந்தது போன்றவை. இறைவன் சனகாதி முனிவர் பொருட்டு (", πάλι σε διπείεπ εσωνά &αν σ υφή πι" και (3 ιπα η ηπαθιι ακαι