பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் பொதுவாகத் தொழிற்படும் நிலையில் சிவம் என்றும், கிரியை பொதுவாகத் தொழிற்படும் நிலையில் சக்தி என்றும், பெயர்களைப் பெறுகின்றன. அவை சிறப்பாகத் தொழிற்படும் நிலையில் நாதம், விந்து இரு நிலைகள் உளவாகும். வித்தி யேசுவரனாய் நிற்கும் ஒரு நிலையில் இறைவன் ஒருவனாய் நில்லாது உருத்திரன், திருமால், அயன் முதலிய பலவகை நிலைகளை அடைவான். எனினும் இம்மூன்று நிலைகளே சிறப்பாக எடுத்துக் கொள்ளப்பெறும். அதனால் வித்தியேசு வரன் எனத் தனியே கூறாது உருத்திரன், திருமால், அயன் என மூன்றாக வைத்துச் சொல்லப் பெறும். இவற்றை மேற்கூறியவற்றோடு கூட்டச் சிவம், சக்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், திருமால், அயன்’ என ஒன்பதாகும். இவை நவந்தருபேதம்’ என வழங்கப் பெறும். ஆகவே, ஒருவனாகிய இறைவனே உலகத்தைச் செயற்படுத்த வேண்டி நவந்தருபேதங்களாய் நிற்பன் என்று அறிந்து தெளிய வேண்டும். இக்கூறியவற்றுள் முதலில் உள்ள சிவன், சக்தி, நாதம் விந்து என நான்கும் அருவத்திருமேனிகள். இறுதியில் உள்ள மகேசுவரன், உருத்திரன், திருமால், அயன், என்ற நான்கும் உருவத்திருமேனிகள். இடையிலுள்ள சதாசிவன் மட்டிலும் அருவுருத்திருமேனி. உருவம் கண்ணுக்குப் புலனாவது. அருவம் அங்ங்னம் புலனாகாதது; எனினும் வரம்புபட்டு நிற்பது. அருவுருவம் கண்ணுக்குப் புலனாயினும் ஒளிப்பிழம்பாய் நிற்பதன்றிக் கை, கால் முதலியன இல்லாதது.' இலிங்கஉருவமே அறிவுருவத் திருமேனி என்பது அறியப்படும். இவண்கூறிய உருவத்திரு 64. வள்ளல் பெருமான் இவ்வடிவத்திையே அருட்பெருஞ்சோதி என்று குறிப்பிடுவர்.