பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரியை வகை

குஞ்சி


கிரியை வகை - 1. கிரியையில் சரியை: சிவபூசைக்கு வேண்டியவற்றைத்திரட்டுதல், 2. கிரியையில் கிரியை: பூதகத்தி முதலிய 5 வகைச் சுத்திகள் செய்து, சிவலிங்க வடிவல் பூசனை செய்தல், 3.கிரியையில் யோகம்: அகத்தே பூசை, ஓமம், தியானம் என்னும் மூன்றிற்கும் முறையே இதயம், நாபி, புருவநடு என்னும் மூவிடங்கள் வகுத்துக் கொண்டு செய்யும் அந்தரியா கப்பூசை 4 கிரியையில்ஞானம்: அவ்வந்தரியாகப் பூசையின் உறைப்பால், ஒரு பட்டறிவு ஏற்படுதல்.

கிரீடாப் பிரமம் - விளையாட விழையுங் கடவுள்.

கிரீடாப் பிரம வாதம் - பரப்பிரமம் சில விளையாடல் களை விளையாட விரும்பி உயிராகவும் உலகமாகவும் உருவெடுத்து விளையாடல் என்னும் கூற்றுநிகழ்த்தியது. கிரீடா, கிரீடை விளையாட்டு, எ-டு ஜலக்கிரீடை இவ்வாதம் செய்பவர்கிரீடாப்பிரமவாதி.

கிருகரன் - 10வளிகளில் ஒன்று.

கிருபாகாரி - 8 சித்திகளில் ஒன்று.

கிழவி - குண்டலி ஆற்றல். இது பலரிடத்தும் பாம்பு வடிவாய் வால் மேலாகத் தலையை மூலா தாரத்தில் வைத்து உறங்கும். ஆதலால், அது கிடந்த கிழவி எனக்கூறப்படுகிறது. அதனை யோகிகள் தம் ஆற்றலால் எழுப்பித் தலை மேலாகச் சுழலச் செய்வர். அவ்வாறு செய்யும் பொழுதே மயக்க உணர்வு நீங்கிச் சிவஞானம் விளங்கும். அதை அவ்வாறு எழுப்பி அதனோடு ஒன்றித்து நிற்பதே உயிர் இயல்பை உள்ளவாறு உணர்வதற்குரிய வழியாகும். (அருணை வடிவேலு முதலியார்).

கிளந்தெடுத்து உரைத்தல் - விதந்து கூறுதல்.

கிள்ளிஎழுப்பு - ஆசிரியன்தன் தீக் கையால் திருவருளை வெளிப்படுத்தி உணரச் செய்வது.

கிளைக்கில் ஞானம் - விளங்கும் ஞானம் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கிளத்தல்,

கீடம் - வண்டு.

கீண்டு - கிழி, எ-டு சலந்தரன் உடல் கீண்டு (சிசிபப 292).

கீழ் ஏழுலகம் - அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாலம் இவை எழும் புவியின் கீழ் உள்ளவை.

கீழ் நாடல் - வியாப்பியமாகக் கருதல்.

கீழன - பின்னர்த் தோன்றும் தத்துவங்கள். ஒ. மேலன.

கீழாலவத்தை - கீழ்நோக்கு அவத்தை. கீழ்நோக்கி நடைபெறும் பாடு. சாக்கிரத்திலிருந்து துரியாதீதம் வரையிலுள்ள 5 நிலையிலும் ஆன்மா கீழ்நோக்கி நெற்றியிலிருந்து மூலாதாரத்திற்குச் செல்லும் நிலை. ஒ. மேலாலவத்தை.

கு

குங்கிலிய கலய நாயனார் - மறையவர். திருக்கடவூர் சோழ நாடு, தில்லை கூத்த பெருமானால் அவர்தம் திருவடிகளையே திரு முடியாகச் சூட்டப்பட்டவர். இலிங்க வழிபாடு(63).

குஞ்சம் - யானை

குஞ்சி - குஞ்சு காகத்தின் குஞ்சு

94