பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சத்தம்

சதுர்ப்பாதம்


சத்தம் - ஒசை, சொல். ஐம்புலன் களில் ஒன்று. எ-டு சத்தம் பொருள்தான் அறிதற்கு உளதாம் (சிசிபப 219).

சத்தப்பிரபஞ்சம்-சொல்லுலகம் மாயையினின்று தோன்றுவது. பா.அர்த்தப் பிரபஞ்சம்

சத்தப் பிரம வாதம் - ஏகான்ம வாதத்தில் ஒருவகை நாதமே பிரமம் என்னும் கொள்கை. இக்கொள்கையர் சத்தப்பிரமவாதி.

சத்தர் - சிவன்.

சத்தாதிகள் - ஐம்புலன்கள்.

சத்ததாது-பா.ஏழுதாது.

சத்தி-பாசக்தி,

சத்தி சங்கற்பம்-சத்தியாய் இஃது இங்ங்னமாகுக என்று எண் ணுதல்.

சத்தி தத்துவம் - சத்தியாகிய தன்மை, அல்லது ஆற்றல், சுத்ததத்துவங்களில் ஒன்று.

சத்தி நாயனார்-வேளாளர்.வரிஞ்சையூர் - சோழநாடு. திருவைந் தெழுத்தை ஓதி வந்தவர். சிவனடியாரை இகழ்பவன் நாவை அறுக்கச் சத்தி என்னும் கருவி ஏந்தியவர். சங்கம வழிபாடு(63)

சத்திநி பாதம்- ஆற்றல் வீழ்ச்சி. திருவருள்பதியப்பெற்றவினை. அதாவது,உயிர்களின் பக்குவம் சிறிதுசிறிதாகமுதிர,இறைவன் திருவருளும் அவற்றில் சிறிது சிறிதாகப் படிதல் முந்நிகழ்ச்சி களில் ஒன்று இதிலுள்ள படி நிலைகள் நான்கு மந்ததரம் மந்தம், தீவிரம்,தீவிரதரம்.இவற்றில் முதல் மூன்றில் சரியை, கிரியை, யோகம் ஆகியவையும் இறுதி ஒன்றில் ஞானமும் நிகழ்வதால், இறைவன் குரு சதுர்ப்பாதம் வாகிவந்து ஞானத்தை உணர்த்துவான். ஆன்மா உய்வதற்குரிய வழி, சரியை, கிரியை யோகம், ஞானம் ஆகிய நான்கு சாதனங்களைச் செய்தலாகும். ஆன்மா பரிபக்குவ நிலையில் இருவிணை ஒப்பு, மலபரிபாகம்,

சத்தி நிபாதன்-ஆகிய முந்நிகழ்ச்சிகளும் ஒருங்கே நிகழும் உடனிகழ்ச்சிகளாகும். சத்திநியாதன் - திருவருள் பதியப் பெற்றவன்.

சத்திபேதம் - மகேசை மனோன்மணி, உமை, திரு, வாணி என ஐவகை ஒ. சிவபேதம்.

சத்தி மடங்கல்- வலி குன்றல்,

சத்தியம் - வாய்மை,

சத்திய நிர்வாணம் - மெய்ம்முத்தி, பிறவியறுத்தல்,

சத்தியப் பொருள்- உண்மைப்பொருள்

சத்து - மெய், முழுமுதல், எக்காலத்தும் நிலைத்திருப்பது. தோன்றியும் நின்றும் அழிதலும் வருதலுமாகிய மாற்றம் இல்லாதது. சத்து என்பதே சைவசித்தாந்தம் கொள்ளும் பொருள். எ-டுசத்தாம்சகத்தின் அமைவு எல்லாம் (சிசிபப 225) ஒ. அசத்து.

சத்ரம் - குடைபிடித்தல் வழிபாட்டு முறைகளுள் ஒன்று.

சதுர்த்தா சத்திநிபாதம்-சத்திதி பாதமி நானகு. மந்த, மந்ததரம, தீவிர தரம் என நான்கு.

சதுர்ப்பதவி சதுர்விதம்-சாமீப் பியம், சாலோகம், சாரூபம், சாயுச்சியம் என நான்கு

சதுர்ப்பாதம் - நான்கு பாதம் அல்லது அடி கிரியை, சரியை, யோகம், ஞானம் என நான்கு.

104