பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமட்டிப் பிரணவம்

சமய விசேடம்



சமட்டிப்பிரணவம்- ஒம் என்பது அகாரம் முதலிய ஐந்தின் தொகுதியாய் நிற்பதால், அது சமட்டிப் பிரணவம் ஆகும்.

சமணம் - சைனமதம், ஆருகதம். பற்றும் உடம்பில் உயிர் பரவி நிற்பது என்னுங்கொள்கை

சமணர்-சைனர்,ஆசீவகர்,சாவகர் அருகர், ஆருகதர், சாரணர், யோகர். அருகனை வழிபடு வோர். அருகன் சமணருக்கு ஆதி குருமூர்த்தி ஆன்மாவும் உலகமும் அநாதிநித்தியமாகும். உலகத்துக்குக் காரணமாகிய ஒரு கடவுள் இல்லை என்பது இவர்கள் கொள்கை அட்ட குணம் முத்தியில் நம்பிக்கை உள்ளவர்கள். தீர்த்தங்கரர் களில் புகழ்பெற்றவர்மகாவீரர். இவர் புத்தர் காலத்தவர். இச்சமயம் திருஞான சம்பந்தர் காலத்து மிக்க ஏற்றம் பெற் றிருந்தது.

சமணர் கூற்று- அனேகாந்தவாதம்.

சமயம் - சமைக்கப்பட்டது சமயம் வகுக்கப்பட்ட கொள் கைப்படி வாழ நன்னெறிகள் அளிப்பது. இறைவனோடு ஒன்றச் செய்வது. மக்கள் தொண்டும் இறைத்தொண்டும் செய்ய வற்புறுத்துவது.இதன் இரு கண்கள் சாத்திரமும் கோத்திரமும் ஆகும். சைவ சமயம் சிறந்த சமயம்,

சமயம் சாதிக்கும் கருவிகள்-பா. மறுப்பு உத்திகள்.

சமயக் கணக்கர் - மதவாதிகள்.

சமயக் கணக்கு- மதவாதம் எடு கத்தும் சமயக்கணக்கில் படுவரோ (நெவிது 120)


சமயக் குரவர் க - சமயாசாரியர் நால்வர். அப்பர், சுந்தரர், சம்பந்தர், நாவுக்கரசர், மூவர் அப்பர், சுந்தரர், சம்பந்தர்.

சமய தீக்கை - ஒருவனை ஒரு சமயத்திற்குரியவனாக்கும் செயல் சமயம் என்பது இங்குச் சைவத்தைக் குறிக்கும்.

சமய பதார்த்தம் - பதி, பசு, பாசம், பதி கிருத்தியம், பசு கருமம், பசுபோகம், முத்தி சாதனம், முத்தி என எட்டு. சைவ சமயத்திற்குரியது.

சமய வகை- சைவசித்தாந்தத் தைப் பொறுத்தவரை சமயம் நான்கு வகை: 1) அகச்சமயம் 6 2) அகப்புறச் சமயம் 6 3) புறச் சமயம் 6 4) புறப்புறச்சமயம் 6

சமய வாதம் - சமயக்கொள்கை. ஒவ்வொருவரும் தத்தம் சமயமே உயர்ந்தது என்று கூறி அதைச் சான்றுகள் மூலம் நிலைநாட்ட முயலுதல். இங்குச் சைவத்திற்கு மாறான சமய வாதங்கள் எல்லாம் சற்காரிய வாதத்தின் மூலம் மெய்கண்டாரால் திறம்பட மறுக்கப்படு கின்றன.அவர்42 சமயங்களைத் தம் நூலாகிய சிவஞானபோதத் தில் மறுக்கின்றார். இவரைப் பின்பற்றி அருணந்தி சிவாசாரியார் தம் சிவஞான சித்தியார் பரபக்கத்தில் 14 மதங்களையும் உமாபதி சிவாசாரியார் தம் சங்கற்ப நிராகரணத்தில் 9 மதங் களையும் மறுக்கின்றனர்.

சமயவாதி - தன் சமயமே உண்மைச்சமயம் என்று கூறுபவர். சமய விசேடம் - திரோதிகாரம், அர்ச்சனாதிகாரம், யோகாதிகாரம், சமய தீக்கை, சிறப்புத் தீக்கை என ஐந்து.

106