பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சற்காரிய வாதச் சிறப்புகள்

'

சாக்கிய நாயனார்


னும் சைவ சித்தாந்தக் கொள்கை உள்பொருள் வழக்குரை.

சற்காரிய வாதச் சிறப்புகள் -

1) தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்வதால் உளவியல் திட்பம் உடையது.

2) மறுப்புக்குச் சிறந்த கருவி, எனவே,இதனை மெய்கண்டார் சிறப்பாகக்கையாள்கின்றார்.

3) காரியம் ஒடுங்குங்கால், அதன் முதற் காரணத்தில் ஒடுங்கும்.

4) இலயித்தது என்றதனாலேயே அழியாமல் ஒடுங்கியது ஒன்றாகி, ஒடுங்கிய உலகம் மீண்டும் தோன்றும் என்பதாகிறது.

5) நிலத்தின்கண் உள்ள வித்தில் நின்று முளை தோன்றுமாறு போல, ஒடுங்கிய அவத்தையிலுள்ள மாயையினின்று உலகம் தோன்றும்.

6) இருவினை, ஆதி என்று கூறின், முன்பு இல்லாதது பின்னர்த் தோன்றும் எனப்பட்டு வழுவாகும்.

7) தூல உடல் புதிதாய்த் தோன்றினும், அவ்வாறு தோன்றுவதற்குச் சூக்கும உடல் உள்ள தாய் இருத்தல் பற்றி இல்லது தோன்றுவதில்லை.

8) மாறிப்பிறத்தல் உயிருக்குண்டு.

9) சகச மலத்தினால் ஆன்மாவிற்கு உணர்வு இல்லாமல் போகுமாயின், இல்லாத உணர்வு பின் உண்டாதல் கூடாது. ஆகவே, அம்மலம் ஞானத்தின் தொழில் நிகழவொட்டாது மறைத்துக் கொண்டு நிற்கும் இவ்வாதம் சைவசித்தாந்தத்திற்கே உரியது.

சற்குரு - நல்லாசான். எ-டு சாத்திரத்தை ஒதினார்க்குச் சற்குருவின் தன் வசன மாத்திரத்தே வாய்க்கு நலம் (திப 6)

சற்புத்திர மார்க்கம் - மகன்மை நெறி. நான்கு சமய நெறிகளுள் ஒன்று. பா. மார்க்கம்.

சனகர் - சிவபெருமானிடம் ஞானம் பெற்ற நான்கு முனிவர்களில் ஒருவர்.

சனந்தனர் - பாசனகர்

சனற்குமாரர் - பாசனகர்,

சனனம் - பிறப்பு.

சனனம் சார்தல் - ஏறுதல்.

சன்மார்க்கம் - மெய்ந்நெறி, நன்னெறி, ஞானநெறி.நான்கு சமய நெறிகளில் ஒன்று. இந்நெறியை மாணிக்கவாசகரும் இராமலிங்க அடிகளும் பரப்பியவர்கள் பா. மார்க்கம்.

சன்மார்க்க சித்தியார் -14 பண்டார சாத்திரங்களில் ஒன்று ஆசிரி யர் அம்பலவாண தேசிகர்.

சன்மார்க்க முத்திகள் - நான்கு சாலோக்கியம், சாமீப்பியம், சாரரூப்பியம், சாயுச்சியம்.

சன்னிதானம் - 1) திருமுன் 2) மடாதிபதி 3) சிவ ஆவேசம்

சனாதனர் - பா. சனகர்,

சனி - 9 கோள்களில் ஒன்று.

சா

சாக்கியம்-சாக்கிய மதம் பெளத்த மதம். சாக்கிய இனத்தில் தோன்றியதால் இப்பெயர்.

சாக்கியன்-சாக்கிய முனி, புத்தர்.

சாக்கிய நாயனார் - வேளாளர். திருச்சங்கமங்கை சோழநாடு, பெளத்த மதத்தைச் சார்ந்து, அக்கோலத்தில் இருந்தபடியே

109