பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாத்தியர்

சார்ந்ததன் வண்ணம்



வைதிகம் : 1) இலெளகிகம், ஆயுள் வேதம், தண்ட நீதி 2) மீமாஞ்சை (சைமினி),நியாயம் (அக்கபாதர்), வைசேடிகம் (கணாதமுனிவர்) 3அத்தியான் மிகம்-சாங்கியம், பாதஞ்சலம் (பதஞ்சலி), வேதாந்தம4) அதி மார்க்கம் (கபிலமுனி) பாசு பதம், காபாலிகம், மாவிரதம் 5) மாந்திரம் - சிவன் அருளிய சித்தாந்தம.

சுருங்கக்கூறின், மீமாஞ்சை,வைசேடிகம் நியாயம், சாங்கியம்,பாதஞ்சலம், வேதாந்தம் ஆகிய ஆறுமாகும். இவற்றில் வேதாந் தம் ஒன்றுமட்டுமே அத்து விதம் - ஏனைய ஐந்தும் பேத நூல்கள். அவைதிகம் : உலகாயதம், பெளதிகம், ஆருகதம்.

சாத்தியர் -தேவருள் ஒரு சாரர்.

சாத்துக்கூறை-விக்கிரகங்களுக்கு அணியும் ஆடை

சாத்துப்படி-கோயில் விக்கிரகங்களுக்குச் செய்யும் அழகு.

சாதாக்கியம் - சதாசிவ தத்துவம் ஞானமும் கிரியையும் சமமாக இருத்தல்.

சாதாகா சாரியார் - நன்மைசெய்பவர்.

சாதாரண இலக்கணம் - பா.இலக்கணம்

சாதாரம்-ஆதாரத்தோடுகூடியது.

சாதார தீக்கை - படர்க்கையில் சுத்தானம், சைதன்யத்தில் ஆவேசித்து உணர்த்தும் தீக்கை

சாதி- ஒரு கூட்டத்துக்குப் பொதுவாக உள்ள தன்மை, குலம்.

சாதி ஞானம் - ஒரு சொல் ஒருமை ஈறு தோன்றியாவது தோன்றாமலாவது நின்று பன் மைப் பொருளை உணர்த்துவது.

சாதித்தல்-சாதனத்தால் நிறுவுதல்

சாதிநெறி-சாதி கோட்பாடு

சாந்தம் - அமைதி சுவை 9 இல் ஒன்று.

சாந்த ரூபம் - பொறுமையாய் இருக்கும் தன்மை,

சாந்தி அதீதை - கலை 5 இல் ஒன்று.

சாமரம் - விசிறி கொண்டு விசுறுதல் வழிபாட்டு முறைகளில் ஒன்று

சாமீபம், சாமீப்பியம் - இறை நிலை 4 இல் ஒன்று. கடவுள் அருகில் இருத்தல். பா. சன்மார்க்க முத்தி,

சாம்பொழுது-அறிவு ஒடுங்கும் பொழுது

சாம வேதம் - வேதம் 4 இல் ஒன்று.

சாமுசித்தராவார் - சிவபாவனை பண்ணும் சீலர்,

சாயாக்கோள் - இராகு, கேது.

சாயுச்சியம் - இறைநிலை 4இல் ஒன்று. ஆன்மா கடவுளுடண் ஒன்றும் நிலை.

சாயை காட்டுதல் - கண்ணாடி காட்டுதல் வழிபாட்டு முறைகளில் ஒன்று.

சாரணர் - சமணரிலும் புத்தரிலும் சித்தி பெற்றவர்.

சாரவம், சார்வம் - சட்டி

சார்தல் - அடைதல்.

சார்ந்ததன் வண்ணம் - தற்றரும தருமி என்பது வடமொழி வழக்கு படிகம் தான் சார்ந்த பொருளின் வண்ணமாதல் போல், சத்து, அசத்து என்பவற்றுள் எதனோடு சார்கின்றதோ அதன் தன்மைத்தாய் நிற்பது ஆன்மா. இதுவே

112