பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சார்ந்தோர்

சித்தம்



ஆன்மாவின் சொரூப அல்லது உண்மை இலக்கணம் பொதுவாக, ஒருபொருள் தான் சார்கின்ற பொருளின் வண்ணமாகும். பசு என்னும் உயிர் சிற்றறிவு உடையது. ஆதலால், அது தன் சார்ந்த பொருளின் வண்ணமாவது.

சார்ந்தோர் - அடைந்தோர்.

சார்ச்சி - சார்தலின்,

சார் நித்தியம் - கூட்டம்.

சார்பு - 1) பற்று, சமயச்சார்பு, 2) திருவருள்.

சார்புகெட - திருவருளினால் அத்திருவருளுக்கு மேல் செலல்.

சார்புணர்தல் - பற்றை உணர்தல். சார்புணர்தலே தியானமாகும்.

சார்புநூல் - நூல் 3 இல் ஒன்று. எ-டு சங்கற்ப நிராகரணம் என்னும் மெய்கண்ட நூல் பா. முதல் நூல், வழி நூல்

சார் வாகன் - 1) சார்வாக மதத்தினன் 2) உலகாயதத்தை நிறுவியவர்.

சாரீரம் - குரல். எ-டு இசைக்கு நல்ல சாரீரம் வேண்டும் ஒ. சரீரம்.

சா(ர்) வாகம் - நாத்திக மதம். வேறு பெயர் உலகாயதம்.

சாரூப்பியம் - இறை பதவி 4இல் ஒன்று. கடவுள் போல் வடிவம் பெறுதல்.

சாலம்பயோகம் - ஆதாரத்தோடு கூடிய யோகம்.

சாலார் - சால்பு இல்லாதவர். எ-டு சாலார் செயல் மால் ஆகுவதே (இஇ 16).

சாறுதல் - அமைதல்,

சாலோகம், சாலோக்கியம் - இறை பதவி 4 இல் ஒன்று. கடவுளுடன் ஓரிடத்தில் உறைதல்.

சாவி - பதர் எ-டு சாவிபோம்.

சாற்று - கூறு.

சானம் - தியானம். இச்சொல்லே சானம் என மருவிற்று. கடவுளை நினைந்து பற்றுதல்.

சானத்தின் தீர்விடம், தீர்விடம் - தீருகின்ற நஞ்சு. வினைத் தொகை. அசத்துப்பொருள்களை அசத்தென்று உணர்ந்து நீக்கி, ஆன்ம அறிவில் இறைவனை உணர்ந்து, சோகம் பாவனை செய்தால், கருட தியானத்தினால் விடம் தீரும். அது போல, ஆன்மாவை அநாதியே கூடி நின்ற கூட்டுணர்வு ஆகிய குறைபாடு நீங்கும். "ஒண்கருடசானத்தின் தீர்விடம் போல் தான்” (சிபோபா 58)

சான்று - சாட்சி, பிரமாணம்.

சான்றோர் - சான்றாண்மை மிக்கவர், நல்லோர், எ-டு சான்றோர் பேரவை.

சி

சிங்க நோக்கு - அரிமாபார்வை சிவஞான போதம் நூற்பா 2 இல் ஆணையின் என்னும் சொல் சிங்கநோக்காய் அமைந்துள்ளது.

சிட்டர் - நல்லார்.

சிட்டன் - அம்பலவாணன்.எ-டு சிட்டன் சிவாயநம.

சித்த சத்து - தமிழ் நூலின் முடிவு

சித்த சாதனம் - சித்தித்ததைச் சாதிப்பது.

சித்தம் - 1) உள்ளம் மனம் சிந்தனை செய்யும் பொழுது சித்த

113