பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித்த புரூடர்

சித்தாந்த சாத்திரங்கள்


 மாகும். மனம் என்பது ஒரு செயலே. மூளையின் விளைவு. இதயத்தில் சென்று பொருந்துவது. 2) 28 ஆகமங்களுள் ஒன்று.

சித்த புருடர் - சித்தியுடையவர்.

சித்தர்கள் - சித்து செய்பவர்கள். சிந்திப்பதைச் செய்பவர்கள். இவர்கள் பாடல்கள் ஞானப் பொருள் உடையவை. இவர்கள் சித்த வைத்தியத்தில் கை தேர்ந்தவர்கள்.வேதிநூல்களும் மருந்துகளும் செய்பவர்கள். இவர்களில் ஒருவரே திருமூலர்.

சித்தர்கள் 18 பேர் - 1) நந்தீசர் 2)போர் 3) திருமூலர் 4) பதஞ்சலி 5) தன்வந்தரி 6) கரூர் சித்தர் 7) சுந்தரானந்தர் 8) மச்ச முனிவர் 9) இராம தேவர் 10) சட்ட முனிவர் 11) கமலமுனிவர் 12) வான்மீகர் 13) குதம்பைச் சித்தர் 14) பாம்பாட்டிச் சித்தர் 15) இடைக்காட்டுச் சித்தர் 16) கோரக்கர் 17) கொங்கணவர் 18) கும்பமுனிவர்

சித்தாந்தம் - பொருள்: சித்தம்-சிந்தனை, அந்தம்-முடிவு. சித்தம் + அந்தம் உள்ளத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சிப் பட்டறிவுடன் மேற்கொண்டு முடிந்த முடிபு. அல்லது மேற்கொள்ளப்படும் நெறிமுறை நெறியம் எனலாம். ஆகையால் இதனை மறுப்பதற்கு ஏதுமிலை. - வகை: இது துவைதம், அத்துவைதம் என இருவகை. துவைதம் என்றால் கடவுளும் உயிரும் வேறு என்பது. அத்துவைதம் என்றால் கடவுளும் உயிரும் ஒன்று என்பது. அத்துவித வகை 1) கேவல அத்துவிதம்: வேறுபெயர் சங்கர சித்தாந்தம் 2) விசிட்டாத் துவைதம்: வேறு பெயர் இராமனுசர் சித்தாந்தம் 3) சுத்த அத்துவைதம். வேறு பெயர் மெய்கண்டார் சித்தாந்தம் இதன் வேறு பெயர்கள் : சைவ சித்தாந்தம், முதல் சைவ நெறி, ஆகம சித்தாந்தம், புனித அத்துவைதம், சுத்த அத்துவைதம். கருத்துகள் : 1) பரமாணுக்கள் தாமுங்காரணமாக அவை காரியமே 2) காரியம் என்னும் நிலையில் தோன்றி நின்று மறைவதாயினும், அது மறையும் போது காரண நிலையில் நுண் உருவில் இருப்பதால் உலகம் என்றும் உள்பொருளே. 3) காரணமாகிய மாயையும் என்றும் உள்பொருளே. பா. சைவசித்தாந்த அடிப்படைகள்.

சித்தாந்த அட்டகம் - மெய்கண்ட சாத்திரங்கள் எட்டுக் கொண்டது. ஆசிரியர் உமாபதி சிவாசாரியார். அவையாவன: 1) சிவப்பிரகாசம் 2) திருவருட்பயன் 3) வினா வெண்பர் 4) போற்றிப் பஃறொடை 5) கொடிக் கவி 6) நெஞ்சு விடுதூது 7) சங்கற்ப நிராகரண்ம 8) உண்மை நெறி விளக்கம் இது சீர்காழி தத்துவநாதர் அருளிச் செய்தது என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு.

சித்தாந்த சாத்திரங்கள் - மெய் கண்ட நூல்கள் 14. அவையாவன: 1) திருஉந்தியார் 2) திருக்களிற்றுப் படியார் 3) சிவ ஞானபோதம் 4) சிவஞான சித்தியார் (பரபக்கம், சுபக்கம்) 5) இருபா இருபது 6) உண்மை விளக்கம் 7) சிவப்பிரகாசம் 8) திருவருட் பயன் 9) வினா வெண்பா 10) போற்றிப் பஃறொடை 11) கொடிக்கவி 12)

114