பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித்தாந்த சைவம்

சிந்தியம்


 நெஞ்சுவிடு தூது 13) உண்மை நெறி விளக்கம் 14) சங்கற்ப நிராகரணம் பா. பண்டார சாத்திரங்கள்.

சித்தாந்த சைவம் - சைவ சமயங்களில் சிறந்தது. இதை உரைப்பவை வேதாகமங்கள், 12 திருமுறைகள், 28(14+14)மெய்கண்ட நூல்கள் ஆகியவை. இதன் சாறம் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருளின் உண்மையை உணர்ந்து மும்மலங்களும் கெட ஆன்மா சத்திநிபாதம் அடைந்து திருவருளால் முத்தி பெறும் என்னும் கொள்கை.

சித்தாந்த சைவாசாரியார் - சித்தாந்த சைவ வல்லுநர்கள்.

சித்தாந்த துணிவு - சித்தாந்த முடிவு. 1) சிவபேதம் 7 : சிவம், நாதம், சதாசிவம், ஈசன், அரன், அரி 2) சத்திபேதம் 7 : சத்தி, விந்து, மனோன்மணி, மகேசை, உமை, திருவாணி. இவை ஒன்று மற்றொன்றாகத் தோன்றுபவை. எனவே 9 என வைக்கப்பட்டன. ஏனைய சதாசிவம், ஈசன், அரி, அயன், அரன் என்னும் 5 சிவ பேதங்களுக்குரிய சத்திபேதங்களாவன மனோன்மணி, மகேசை, உமை, திரு, வாணி.

சித்தாந்த தொகை - தமிழ் மொழியில் செய்யப்பட்ட ஒரு பெளத்த நூல்.

சித்தாந்த நெறி - சைவநெறி.

சித்தாந்த பஃறொடை - 14 பண்டார சாத்திரங்களில் ஒன்று. ஆசிரியர் அம்பலவாண தேசிகர்.

சித்தாந்த பிரகாசிகை - சைவ சித்தாந்த நூல், ஆசிரியர் சர்வான்ம சம்பு சிவாசாரியார்.

சித்தாந்த மரபு - தன்னிலையில் சிவன் என்பதும் உலகுடன் தொடர்பு கொண்ட நிலையில் சத்தியுடன் கூடிய ஒருவன் என்பதும் ஆன்மாவைச் சத சத்து என்பதும் சைவ சித்தாந்த மரபு. பா. சைவ சித்தாந்த முறை.

சித்தாந்த மகாவாக்கியம் - திருவைந்தெழுந்து, எ-டு சிவாய நம, நமசிவாய

சித்தார்த்தன் - 1) புத்தன் 2) வாழ்வின் பயனாகிய பிறவா நெறியை அடைந்தவன்.

சித்தான்மவாதி - சித்தமே ஆன்மா என்னும் கொள்கையினர்.

சித்தாந்த முத்தி - வேற்றுமையும் முனைப்பும் அற்று நிற்றல்.

சித்தாந்த முடிவு - ஆகம முடிவுப்பொருள்.

சித்தி - கைகூடல், வீடுபேறு. சித்தர் சித்தி உடையவர். இது எட்டு வகைப்படும். பா. அட்ட மாசித்தி.

சித்தின்பம் - ஞான ஆனந்தம்.

சித்தியார் - சிவஞான போதத்திற்கு அடுத்ததாகக் கருதப்படும் சிறந்த வழிநூல். பரபக்கம், சுபக்கம் என்னும்,இரு நூல்கள். ஆசிரியர் அருணந்தி சிவாசாரியார்.

சித்து, சிந்தை - அறிவு, உள்ளம், மாயம். சித்தர் சித்து செய்வதில் வல்லவர்.

சிந்தனை - சிந்திக்கும் உணர்வு.

சிந்தித்தல் - உண்மை ஞானம் 4இல் ஒன்று. குரு முகமாகக் கேட்ட பொருளை மனப்பாடம் செய்து குற்றம் நீங்குமாறு ஆராய்தல்.

சிந்தியம் - 28 சிவாகமங்களுள் ஒன்று.

115