பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிவசத்து

சிவஞானபோதம்

சிவசத்து - உணரப்பட்ட உலகப்பொருள் போன்று அசத்தும் அன்று. அவன் இவ் விருதிறனுமில்லாத சிவசத்து ஆகும். மனம் முதலிய கருவிகளால் அறியப்படாமையால், சிவம் என்னும் உண்மை மெய்யர்களால் உணரப்படுவதால் சத்து என்றும் கூறப்படுவது.

சிவ சமயம் - சைவ சமயம்

சிவசமவாதி - முத்தியிலே சிவமும் ஆன்மாவும் ஒன்று என்று வாதிடுபவன். வேறு பெயர் சிவ சமவாத சைவர்.

சிவ சாதாக்கியம் - அருள் ஆற்றலால் தியான மூர்த்தியாய் நின்ற வடிவம்.

சிவ சாதனம் - சிவ சின்னம் உடுத்திராகம், திருநீறு, இலிங்கம்.

சிவ சிற்சத்தி - இச்சத்தியே இறுதிப் பிரமாணம் என்பது சிவ ஞான முனிவர் துணிபு. இது தொடர்பாக அவர் பிரத்தி யட்சம், அனுமானம், ஆகமம் ஆகிய மூன்றின் இயல்புகளை விளக்குவது கருத்தில் கொள்ள வேண்டியது.

சிவசின்னம் - சிவ சாதனம்.

சிவஞானச் செய்தி - திங்கள் முடியார் அடியார் செயல்.

சிவஞானம் - சிவ அறிவு, அருளறிவு, ஆகம உணர்வு.

சிவஞானசித்தியார் - சிவஞானம் சிந்தித்தற் பொருட்டுச் செய்யப்பட்டது. ஆசிரியர் உமாபதி சிவாசாரியார். இது இருவகை

1) சிவஞானசித்தியார் பரபக்கம் : சைவத்திற்குப் புறம்பான பின் வரும் மதங்கள் இதில் விரி வாகப் பேசப்பட்டு மறுக்கப் படுகின்றன. 1) உலகாயதம் 2) செளத்திராந்திகம் 3) யோக 2)சாரம் 4) மாத்தியாமிகம் 5)வைபாடிகம் 6) நிகண்ட வாதம் 7)ஆசீவகன் மதம் 8) பட்டா சாரியன் மதம் 9) பிரபாகரன் மதம் 10) சுத்தப் பிரமவாதம் 11) கிரீடாப்பிரம வாதம் 12) பாற்காரிய வாதம் 13) மாயா வாதம் 14)சாங்கியம்15) பாஞ்சத் ராந்திரம்

சிவஞான சித்தியார் சுபக்கம் - சைவசித்தாந்த அடிப்படை உண்மைகளைத் தெளிவாகவும் விரிவாகவும் விளக்குவது. சிவஞான போதத்திலுள்ள 12 நூற்பாக்களின் கருத்துகளை யும் 12 அதிகாரங்களில் விளக்கு வது.அளவை பற்றியும்கூறுவது.

சிவஞானபாடியத்திறவு - சிவஞான விளக்க நூல். வச்சிர வேல் முலியார் எழுதியது.

சிவஞானபோதம் - 1) பொருள் :சிவ அறிவு பற்றிய ஐயத்தை அகற்றுவது. அதாவது, சைவா கமங்கள் குறித்து எழும் ஐயங்களை நீக்கி, அவற்றைத் தெள்ளத் தெளிய உண்ர்த்துவது.

2) பாக்கள்:நூற்பாக்கள்12வெண் பாக்கள் 81. நூற்பாக்களிலுள்ள எழுத்துகள் 624 சொற்கள் 216 அதிகரணங்கள் 39. அரிய பெரிய சமய உண்மைகளை விளக்கும் இத்துணைச்சிறிய நூலை எம்மொழியிலும் காண்பது முயற்கொம்பே. திருமுறைகளில் பரக்கக் காணப்படும் உண்மைகளை நிரல்படுத்திச் சுருக்கமாகவும் செறிவாகவும் தெள்ளிதின் விளக்கிய பெருமை இந்நூலாசிரியர் மெய்கண்டாரையே சாரும்.

3)அமைப்பு: பொது அதிகாரம், உண்மை அதிகாரம் என இரு அதிகாரங்களைக்கொண்டது.