பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிவஞானபோத மொழி பெயர்ப்புகள்

சிவத்துவிசர்


5) நாற்படிகளில் ஞானபாதத்தை உயரிய முறையில் விளக்குவதால் உயர் சிவஞான போதமாகும். 6) மெய் கண்ட முதல் தமிழ் நூல். 7) சைவ சித்தாந்தம் என்பது தமிழர் பேரறிவின் பெரு விளைவு. இதனை விரிவாக விளக்குவது. 8) மங்கல வாழ்த்து முதன் முதலில் பாடப்பட்ட நூல்.

சிவஞானபோதமொழிபெயர்ப்புகள்-1) திரு ஜே.நல்லசாமிப் பிள்ளை, டாக்டர் பென்னட் ஆகிய இருவரும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர். 2) டாக்டர் சாமரஸ் என்பார் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார் 3) சிவாக்கிர யோகிகள் வடமொழியில் இதற்குச் சிற்றுரையும் பேருரை யும் செய்துள்ளார்.

சிவஞான போதம் முதல் நூல்-இது வட மொழியிலுள்ள சிவ ஞானபோத மொழிபெயர்ப்பு என்னும் தவறான கருத்துள்ளது. இதற்கு இந்நூலிலோ இதன் வழிநூல் சார்பு நூல்களிலோ மெய்ப்பிக்க கூடிய சான்றுகள் இல்லை. இது முதன் முதலில் தமிழிலே மெய்கண்டார் அருளியது என்பது ஆராய்ச்சி அறிஞர்கள் முடிவான கருத்து.சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே மொழி பெயர்ப்பல்ல 120 காரணங்கள் என்று ஒரு சிறு நூலை சென்னை சைவசித்தாந்தப் பெருமன்றம் வெளியிட்டிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

சிவஞான முனிவர்- சிவஞான போத உரையாசிரியர்.சிற்றுரை, பேருரை என்னும் இரு உரைகள் அருளியவர். இவ்விரண்டில் பேருரை பாடியம், திராவிடமாபாடியம், சிவஞானமாபாடியம் என்று புகழ்ப் பெறுவது. இவர் தென்மொழி,வடமொழிகளில் வல்லவர். இவர்தம் உரைகள் இலக்கியம் இலக்கணம், அளவை இயல், முதலிய பலவும் நிறைந்து மிகவும் திட்ப நுட்பங்களைக் கொண்டவை. தமிழில் தொல்காப்பிய பாயிர விருத்தி, முதல் சூத்திர விருத்தி, தருக்க சங்கிரக மொழி பெயர்ப்பு, நன்னூல் விருத்தி என்பவைகள் இவர் எழுதியவை. இவர் இயற்றிய செய்யுள் நூல் காஞ்சிபுராணம்.

சிவம், சிவன் - சித்து, சிகாரம். சிவதத்துவம் 5 இல் ஒன்று. சிவமே சிவ சமயம். முதற் கடவுள். பல வடிவங்களில் பேசப்படுபவன்.சிவமே சத்தி, சத்தியேசிவம், ஆக்குபவனும் அழிப்பவனும் சிவனே. பக்குவப்பட்ட உயிருக்கு அருள் புரிந்து உணர்த்துபவன், இரக்கமே வடிவானவனும் முதல்வனுமானவனும் சிவமே இயற்கைப் பொருள்களில் உள் நின்று உணர்த்துபவன். குருவாகப் புறத்தே வந்து அருள்புரிபவன். மனித வடிவவில் தோன்றி அருளுவது சிவத்தின் எளிமைப் பண்பு. முக்கடவுளர்களில் முதன்மையானவன்.

சிவதத்துவம் - சிவநெறிமுறை, சுத்த வித்தை, ஈசுவரம், சாதாக்கியம், விந்து, நாதம், தோற்ற முறையில் முதலில் நிற்பது சித்த மாயையில் தோன்றுவது.

சிவத்துவிசர் -ஆதிசைவர்

119