பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுட்டியறியப்படுவது

சுத்த தத்துவம்


சுட்டியறியப்படுவது - இது பொன், இது மண் என்றாற் போல் ஆன்ம அறிவால் ஒவ்வொன்றாகக குறித்து அறியப்படுவது.

சுட்டிறந்து நின்றறியப்படுதல் - அத்துவிதமாய் நின்று அறியப்படுதல்.

சுடிகை - நெற்றிச்சுட்டி. ஒரு வகை அணிகலன்.

சுதந்திரம்- உரிமைப்பேறு, தன்வயம்.

சுதந்திரத் தாள் - உமை.

சுதந்திர வடிவம் - தன்வய வடிவம் இறைவனுக்குரிய தனி இயல்பு.

சுத்த சாக்கிரம் முதலியவை - இவை தத்துவ-தாத்துவிகக் கருவிகள் நிகழா நிலை. இறை வன் திருவருளால் நிகழ்வது. இறைவன் திருவருளிலே ஆன்மா அழுந்தி நிற்கும்.

சுதம் - பரமாகமம்.

சுத்த சித்து - சிறப்பிக்கப்படாத சத்து.

சுத்த விவபதம் - பரமுத்தி.

சுத்த சிவம் - நிட்கள பரமசிவம்.

சுத்த சைவம் - சைவம் 16இல் ஒன்று. அகச்சமயம் சார்ந்தது. இதற்கும் சைவ சித்தாந்தத்திற்கும் வேறுபாடு மிக நுட்பமானது. ஆகவே, அதை வேறாகப் பிரித்துக் கூறுவதில்லை.

சுத்த சைவர் - எம் பெருமானோடு கூடிய நிலையில், உயிர் ஒன்றிப் போகும். சிவ இன்பத்தை அது நுகர்வதில்லை என்னும் கொள்கையினர்.

சுத்தம் - அருள் நிலை; தூய்மை மும்மலங்கள் நீங்கும். ஆன்மா தூய்மை எய்தும், சிற்றறிவு ஒழியும். ஞானம் பெருகிய நாயகன் தன் பாதம் அடைய ஏதுவாகும் நிலை. இதில் சாக்கிரம் முதலிய 5 காரிய அவத்தைகள் நிகழும்.

சுத்த இச்சை - இச்சைஞானம், கிரியை.

சுத்த தத்துவம்- தோற்றம் சுத்த மாயையிலிருந்து சிவம், சத்தி, சாதாக்கியம், ஈசுவரம், சுத்த வித்தை என ஐந்து தத்துவங்கள் முறையே ஒன்றிலிருந்து ஒன்றாய்த் தோன்றும். இவற்றின் காரியமே சுத்த பிரபஞ்சம் வேறுபெயர் சிவதத்துவம் ஆற்றல்; மறைப்பாற்றல் உலகத்தைச் செயற்படுத்தும் பொழுது விழைவாற்றல், அறிவாற்றல், வினையாற்றல் எனப் பெரும்பான்மை மூன்றாக நிற்கும் அவற்றுள் விழைவாற்றல் ஒரு நிலையிலேயே இருக்கும். ஏனைய இரண்டான அறிவாற்றல், வினையாற்றல் ஆகியவை தனித் தனியேயும் மிக்கும் குறைந்தும் செயற்படும். இது இயல்பே இந்நிலையில் செயற்படும் தத்துவங்கள் பின்வருமாறு. வகை; 1) சத்தி; ஆற்றல். வினையாற்றல் மட்டும் செயற்பட நிற்குங்கால் இறைவனே சத்தி எனப் பெயர் பெறுவான். அதனால், அவனுக்கு இடமாகின்ற தத்துவமும் சத்தி தத்துவம் எனப்படும். இதனையே விந்து தத்துவம் என்றுங்கூறுவர். 2) சாதாக்கியம் அறிவும் வினையும் சமமாகச் செயற்பட்டு நிற்குங்கால் இறைவன் சதாசிவன் எனப் பெயர் பெறுகிறான். அதனால் அவனுக்கு இடமாகின்ற தத்துவமும் சதாசிவ தத்துவம் அல்லது சாதாக்கிய தத்துவம் என்று பெயர் பெறும்.

125