பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுத்த தத்துவப் புவனம்

சுத்த மாயை


3) ஈசுவரன்; அறிவு குறைந்து வினைமிகுந்து செயற்பட நிற்குங்கால், இறைவன் மமீசுரன் எனப் பெயர் பெறுவான். அதனால் அவனுக்கு இடமாகின்ற தத்துவமும் ஈசுரத் தத்துவம் எனப்படும்.

4) சுத்த வித்தை; வினை குறைந்து அறிவு மிகுந்து செயற்பட்டு நிற்குங்கால், இறைவன் வித்தியேசுரன் எனப்பெயர் பெறுவான். அதனால், அவனுக்கு, இடமாகின்ற தத்துவமும் வித்தை எனப்பெயர் பெறும். அசுத்தி மாயா தத்துவத்திலும் ஒரு தத்துவம் வித்தை எனப்படுவதால் இது சுத்த வித்தை என்றே கூறப்பெறும்.

5) சிவம்; அறிவாற்றல் மட்டும் செயற்பட நிற்குங்கால், இறைவன் சிவன் எனப்படுவான். அதனால், அவனுக்கு இடமாகின்ற தத்துவமும் சிவதத்துவம் எனப்படும். இதனையே நாத தத்துவம் என்றுங்கூறுவர்.

சுத்ததத்துவப் புவனம் - சுத்த தத்துவத்தில் இருக்கும் உலகம்.

சுத்த தத்துவா- ஆறு தத்துவாக்கள்.

சுத்த நிலை - பா. ஆன்ம நிலை.

சுத்த பிரபஞ்சம் - சுத்த மாயையிலிருந்து தோன்றிய உலகம்.

சுத்தபூசை- சிவலிங்கம் ஒன்றை மட்டும் பூசனை செய்வது.

சுத்த மார்க்கம்- துய சமயநெறி.

சுத்த மாயா- விரிபுலன்கள்; சத்தம், பரிசம், ரூபம், கந்தம், ரசம்.

சுத்த மாயை- சைவ சித்தாந்த அடிப்படைக் கருத்துகளில் ஒன்று. வேறுபெயர்கள் விந்து, குண்டலினி, மாமாயை.

காரியம்; இதன் காரியங்கள் சொல்,பொருள் என இருவகை உயிரின் அளவில் சொல் நின்று தனக்குரிய பொருளின் கருத்துப் பிழம்பைத் தோற்றுவிக்கும். இப்பிழம்பு தோற்றுவிக்கும் 4 ஆற்றல்களாவன;

1) செப்பல்; மொழியானது தன் செவிக்கும் பிறர் செவிக்கும் கேட்கும். சொல்பவனுக்கும் கேட்பானுக்கும் நினைத்த பொருளைச் சொல்லும். சிவி கற்ப உணர்வு தோன்றுவதற்கு ஏதுவாகும். இது உயிர்வளியால் உந்தப்பட்டு வெளிக் கிளம்புவது. பல், இதழ், நா, அண்ணங்கள் ஆகியவற்றில் பட்டுச் சிதறுவது.

2) உன்னல்; இது உயிர்வளியால் உந்தப்பட்டு வெளிச் சிதறாமல், பிறர் செவியில் கேளாமல் தன் உள் உணர்வுக்கு மட்டும் ஒசையாய் இருப்பது.

3) பொதுமை; மயில் முட்டையிலுள்ள நீர் மயிலின் நிறங்களைத் தனிதனியாகக் காட்டாமல், தன்னுன் அடக்கியுள்ளதைப்போல், எழுத்துகளை வேறு வேறாக்காமல் தன்னுள்ளே அடக்கி நிற்பது.

4) நுண்மை; நுண்மொழி. பர உடலில் ஒர்ஒளியாகப் பிற மொழிகளைப் போல் மதி ஒன்றி ஒடுங்காமல், மிகவும் நுட்பமான நிர்விகற்ப உணர்விற்கு ஏதுவாய் இருக்கும். இவ்வாறு மொழி அல்லது வாக்கு நான்கு வகையாகும்.

பயன்கள்

1) சகலர், பிரளயாகலர், விஞ்ஞான கலர் ஆகிய மூவருக்கும் இந் நான்கு மொழிகளும் பொருளறிவை ஏற்படுத்துபவை.

126