பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுத்த மாயை

சுத்தாசுத்த தத்துவம்


2) இம்மொழிகட்கு வாக்குகள் நான்கினுக்கு வேறாக உயிர் தன்மைகண்டால்,அது நீங்காத அறிவு, இன்பம், தலைமை, அழியா இயல்பு ஆகியவற்றைக் கொண்டதாகி, இறப்பு, பிறப்பு என்னும் மாறுதல்கள் இல்லாமல் இருக்கும்.

3) இந் நான்கு மொழிகளும் நிவர்த்தி ஆகிய ஐந்து கலை களையும் பற்றி விளங்கும்.

4) மலர்ச்சி; நான்கு மொழிகள் வினைப்படுவது வளர்ச்சி அல்ல பெருக்கமே. பெருக்கம் என்பது புடவை கூடாரமாவது போன்றது. மலர்ச்சியின் ஒரு பகுதி மட்டுமே மாறுபடுவது; முழுதும் மாறுபாடுவது என இரு வகையுண்டு இடம், மொழி விந்துவின் மலர்ச்சியன்று. மலர்ச்சியாகிய தயிர், மோர் ஆனால் போன்று விந்துவிற்கு நித்யதை இல்லாமல் போய்விடும். அவ்வாறு போகில் புதுப்படைப்பு உண்டாகாது. ஆகையால், புடவையே கூடார மானது போன்று இந்த மொழி கள் (4) விந்துப் பெருக்க வடிவ மென்பது சிவாக்கிரயோகி கருத்து.

5) பொருள் வடிவான சுத்த மாயையின் காரியங்கள் கலையும் தத்துவமும் ஆகும். கலை ஐந்தும் சொல் பொருள் ஆகிய வற்றை ஊடுருவி நிற்பன. சுத்த தத்துவம் ஐந்தும் உயிர்களின் அறிவு, செயல், விழைவு ஆற்றல்கள் ஆகியவை மலத்தடையி னின்று நீங்க, இறைவனது அறிவு, வினையாற்றல்களுக்கு அடிப்படையாக நின்று ஏனைய 31 தத்துவங்களைச் செலுத்துவது. 6 சுத்த தத்துவம் ஐந்தும் காலத் தத்துவத்திற்கு முன் தோன்றுவதால், இவற்றிற்கு முற்பாடு கூறுவதற்கில்லை. அறிவாற்றல், வினையாற்றல் ஆகிய இரண்டின் தொழிற்பாடு பற்றியே முற்பாடு கூறப்படுவது இவை சிவனின் தனிநிலை வடிவம் எனப் பெறும் சிவனே தொழிற்படுத்துவதால் சத்திமாயையின் காரியங்கள் சிவதத்துவம் எனப்படும்.

7) வித்யா தத்துவங்கள் எழில், சிவதத்துவம் மாயையினையும் சத்தி கலாநியதி கலைகளையும், சதாசிவம் புருடனையும் ஈசுவரம் அராகத்தையும் சுத்த வித்தை வித்தையினையும் செலுத்துவதால், உயிர்கள் உலக நுகர்ச்சியில் ஈடுபட முடிகிறது.

சுத்த வகை- 1) சிவன் முத்தி - நின் மலசாக்கிரம் 2) அதிகாரமுத்தி நின்மலர் சொப்பனம் 3) யோக முத்தி நின்மலச் சுழுத்தி 4) இலய முத்தி நின்மலதுரியம் 5) பர முத்தி-நின்மலதுரியாதீதம்.

சுத்த வித்தை - சிவ தத்துவம் 5இல் ஒன்று. வினைமிருந்து அறிவு குறைந்திருக்கும். இதற்குக் காரணர் வித்யேசுவரர்.

சுத்த வித்யாதத்துவம் - சுத்த தத்துவம் 5இல் ஒன்று. வினை குறைந்து அறிவு ஏறி ஈசன் அதிட்டித்து நிற்கும் நிலை.

சுத்தன் - அயன், அரி, அரன்.

சுத்தி - 1) தெளிவுக் காட்சி. அருளால் நீங்கல் 2) புற மதத் தாரை இந்து சமயத்தில் சேர்க்கும் பொழுது செய்யும் சடங்கு.

சுத்தாசுத்த தத்துவம்- இது ஏழு சுத்தமும் அசுத்தமும் கலந்தது. காலம், நியதி,கலை, வித்தை, அராகம், புருடன், மூலப் பகுதி

127