பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சூக்கும பூதம்

சூன்ய ஆன்ம வாதம்


முதலிய ஐந்தும் வியட்டிப் பிரணவம் ஆகும். ஓம் என்பது அகாரம் முதலிய ஐந்தின் தொகுதியில் நிற்பதால், அது சமட்டிப் பிரணவமாகும். வியட்டிபகுதி. சமட்டி தொகுதி. அகரம் முதலிய ஐந்தின் தொகுதியே ஓங்காரம் என்பது. இவற்றை பகாது நாடின், அது பிரணவம் ஆகும்.

சூக்கும பூதம் - தன் மாத்திரை

சூக்குமம் - 28 சிவாகமங்களுள் ஒன்று

சூடகம் - கைவளை. இறைவன். அணிகலன்களில் ஒன்று. பா, சவடி

சூத்திரப்பாவை - கயிற்றில் கட்டி ஆட்டப்படும் பாவை.

சூத்திரம் - விதி, நூற்பா . '

சூர்ணிகை, சூர்ணிக்கொத்து - கருத்து முத்தாய்ப்பு. ஒவ்வொரு அதி கரணக் கருத்தைச் சுருக்கி உரைத்தல். காட்டாக சிவஞான போதம் 12 வெண்பாக்களும் 39 சூர்ணிக்கொத்துகளும் கொண்டவை. ஒ. அதிகரணம், வாய்பாடு, மகாவாத்தியம்

சூரிய காந்தக்கல் - ஒரு வகை ஈர்ப்புக் கல், செம்மையான ஞாயிற்றின் ஒளி இக்கல்லில் படுவதால் தீ தோன்றும்.

சூரியபுராணம் - பிரமகைவர்த்த புராணம்.

சூலி -- 1) சிவன் 2) துர்க்கை .

சூலிகாண் குறை, மால் அல்லன் - சூல பாணியே (சிவனே) வினை முதல் திருமால் அல்லன், சூலபாணியை வழிபாடு செய் தவர் துருவாசக முனிவர், அவர் திருமாலைச்சினந்து மார்பிலே மிதித்தார். அவர் பாதம் பட்டதனால் ஏற்பட்ட தழும்பு கொண்டே திருமாலுக்குத் திருமறுமார்பன் என்னும் பெயர் வரலாயிற்று. திருப்பாற் கடலிலே பள்ளி கொள்ளு மவன் பிரம வருடியின் பாதம் பட்ட இடம் தூயதென விருப் பத்துடன் திருமகளை அந்த மார்பிலே வைத்தான். ஆகவே, அவன் மல சம்பந்தி ஆவான். (சிசிப 298).

சூலினி- பார்வதி.

சூலியார் - திரிசூலம். எ-டு சூலி யார் மேல் அணிந்தான். பேரழி வுக் காலத்திலே உலகைக் காக்க வேண்டி மீன் வடிவு கொண்டு ஏழுகடல்களையும் ஒரு செலு விலே அடக்கிய அன்று, செருக் குக் கொண்டு தானே உலக அழிப்பு முதல்வன் என்றார் திருமால். அவர்தம் செருக்கை அடக்க வேண்டி அந்தி மீனை யே பிடித்து செலுவினையம் (செவுளையம்) கண்ணையும் இடந்து கூரிய திருசூலத்தின் மேல் அணியாக அணிந்தார் சூலபாணியாகிய சிவன் (சிசிபவ. 280).

சூழ் - அருள்மொழி, சூழ்ச்சி, நுண்ணறிவு.

சூழ்ச்சி - திறம்.

சூழ்ச்சித் துணைவர்- ஆலோ சனைக்குத் துணையாய் உள்ளவர்.

சூறைத்தேங்காய் - சிதறுகாய்

சூனியம் - பாழ், இன்மை .

சூன்ய ஆன்ம வாதம் - சூன்யமே ஆன்மா என்னும் கொள்கை. இக் கொள்கையினர் சூன்ய ஆன்மவாதி. புத்தருள் ஒரு சாரர்.

130