பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சைவ இலக்கியங்கள்

சைவ சைவசித்தாந்தம்


சைவ இலக்கியங்கள்- சிவம்' பற்றி விரிவாக இயம்பும். சாத்திரங்களான மெய் கண்ட நூல்களும் 12 திருமுறைகளும் சைவ இலக்கியங்களே. இவை தவிரச் சைவ நூல்களை அருளிச் செய்தபின் வருவோரும் இவற் றில் அடங்குவர். 1) தமிழ்ப் பாட்டி ஔவையார் 2) திருஞான சம்பந்தர் 3} சிவப் பிரகாச சாமிகள் 4) தாயுமான சாமிகள் 5) குமரகுருபர சாமி கள் 6) கச்சியப் சிவாசாரியார் 7) கச்சியப்ப முனிவர்.8) மாதவச் சிவஞான முனிவர் 9) சாந்த லிங்க சாமிகள் 10) பரஞ்சோதி முனிவர் 11) சிதம்பர சாமிகள் 12) சிற்றம்பல அடிகள் 13)வாகீச முனிவர் 14) சம்பந்த முனிவர் 15) அருணகிரிநாதர் 16) அருட் பிரகாசவள்ளலார் 17) அபிராமி பட்டர். 18) ஆறுமுக நாவலர் 19) பாம்பன் சுவாமிகள் 201 தண்டபாணி சுவாமிகள், சைவ சமய ஆசாரியர்கள், இவர்கள் சமயக் குரவரும் சந்தானாசாரியாரும் ஆவர். இவர்களில் முன்னவர் சம்பந்தர் அப்பர், சுந்தரர், மணிவாசகர் ஆகிய நால்வருமாவர். இவர் கள் தத்தம் வழியில் தனியாக நின்று அருள் வாழ்க்கை நடத் தியவர்கள். பின்னவர் ஒருவர் மற்றொருவருக்கு மாணாக்க ராய் இருந்து, தம் அருள் உரையாலும் நூல் வழியாலும் தாம் பெற்ற திருவருள் நெறி விளக்கங்களை அவ்வாறே அருள் உரை முறையாலும் நூல் வழியாலும் உலகிற்கு வழங்கினா, வழங்கி வருகின் 'றனர். எனவே, ஞானநெறியில் இங்ஙனம் இடையறாது வழி சைவ சித்தாந்தம் வழி வந்து விளங்கியதற்காக இவர்களுக்குச் சந்தான குரவர் என்பது பெயராயிற்று. சமயக் குரவர்களில் திருமூலர், சேக் கிழார் ஆகிய இருவரும் அடங்குவர்.

சைவ சமயம் - பா.சைவம்.

சைவமும் வைணவமும் - இவை இரண்டும் ஆகமத்தின் வழியே தோன்றிய பழஞ்சமயங்கள், முன் வேதத்தில் ஒன்றி நின்று, பின் வேறுபட்டவை.

சைவச் சாதனங்கள் - இவைமூன்று; திருநீறு, உருத்தி ராக்கம், அஞ்செழுத்து.

சைவத்தின் சாரம்- பதி, பசு,பாசம் என்னும் முப்பொருள்.

சைவ சிகாமணி - மெய்கண்டாரும் திருஞான சம்பந்தரும்.

சைவ சித்தாந்தம் - இது ஒரு தத்துவம். தமிழர் பேரறிவின் பெருவினைவு. அறிவு நூல்கள் முடிபெல்லாம் தன்னுள் அடக்கியது. இதனை அளவை இயல் நெறி முறைகளுக்கும் அறிவி யல் உண்மைகளுக்கும் அருள் நெறி நுகர் நலங்களுக்கும் உல சியல் நடைமுறைகளுக்கும் சிறிதும் முரண்படாதவாறு சிவஞானபோதம் அழகுறவும் திறம்படவும் விளங்குகிறது. தமிழிலுள்ள பிற சித்தாந்த சாத்திரங்களிலும் அது விளங்கி வருகிறது. சைவ சித்தாந்தம் 36 தத்துவங் களை ஏற்கிறது. அவையாவன; சிவ தத்துவம் 5. வித்தியா தத்துவம் 7, ஆன்ம தத்துவம் 24. அது ஏற்கும் முப்பொருள் களில் முதன்மையானது பதி ஏனைய இரண்டு பசு, பாசம். பதி என்னும் சைவசித்தாந்த சொல் சிவனுக்கே உரியது.

134