பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சைவ சித்தாந்த அடிப்படைகள்

சைவ சித்தாந்த முறை


சைவசித்தாந்த அடிப்படைகள் - இவை பின்வருமாறு. 1) இப் பருவுலகம் ஓர் உள்பொருள் 2) தோற்றம், மறைவு, நிலை பேறு ஆகிய முத்தொழிலுக்கும் அது உட்பட்டது.3) இத்தொழி லுக்குரியான் ஒருவனுள்ளான். 4) இத் தொழில்கள் தாமாக நிகழ்வன அல்ல 5) இப்பரு வுலகம் மாயையினின்றும் தோன்றி ஒடுங்குவது மர!! ஆகவே, அதற்குப் பிரக்ருதி முதற்காரணமன்று 7) பரமா ணுக்கள் முதற் காரணம் அல்ல 8) முதல்வனும் (பிரமம்) முதற் காரணன் அல்லன் 9) முத் தொழிலைச் செய்வோர் அயன் மால் அல்லா பல கடவுளரும் அல்லர் 10) இம் முத்தொழில் களை முதல்வன் செய்வது உயிர்கள் மலத்தின் நீங்கி உய்வ தற்காக. 11) இவை அவனால் எளிதில் செய்யப்பெறுகின்றன என்பதை உணர்த்தவே விளை யாட்டு என்னும் சொல் பயன் படுகிறது.

சைவசித்தாந்த அமைப்புகள் - ஆதீனங்கள், மன்றங்கள், பதிப் பகம் ஆகியவை இவற்றில் அடங்கும். தருமபுர ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம் திரு வாவடுதுறை ஆதீனம் முதலி யவை குறிப்பிடத்தக்கவை. மன்றங்களில் சென்னையில் செயற்படும் சைவசித்தாந்தப் பெருமன்றம் குறிப்பிடத் தக் கது. பதிப்பகத்தைப் பொறுக்க வரை, சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் ஒன்று மட் டுமே சிறப்பாகச் சைவத்திற்குச் சிறந்த பணி செய்து வருகிறது. மற்றும் பல அமைப்புகளும் ஆங்காங்கு பல ஊர்களிலும் சைவசித்தாந்தைப் பரப்பி வருகின்றன.

சைவ சித்தாந்த அறவியல் - பொது அறத்துடன் சிறப்பு அறம் (சிவ புண்ணியம்) புற வழிபாடு, அகவழிபாடு (உருவம்) அருஉருவம், அருவம் என்னும் நிலைகளில் முழு முதலை உணர்ந்து இறைவனுடன் இரண் டறக் கலந்து நிற்றல் ஆகிய மூன்றுமே சைவ சித்தாந்தத் தின் அறஇயலும் சமய இயலும் ஆகும்.

சைவசித்தாந்த அறிஞர்கள் - பாரிப்பாக்கம் கண்ணப்ப முதலியார், பேரா. கா. சுப்பிர மணியபிள்ளை , திரு. சி. அருணை வடிவேல் முதலியார், திரு நரா. முருகவேள், முனை வர் சுந்தரமூர்த்தி, சேக்கிழார் அடிப்பொடி டி.என் இராமச் சந்திரன் திரு. சி.என் சிங்கார வேலு, குருசாமி தேசிகா முதலி யோர் ஆவர். மெய்கண்ட நூல் களுக்கு உரை எழுதியவர்களும் இதில் அடங்குவர்.

சைவசித்தாந்த இதழ்கள் - சித்தாந்தம் (சைவ சித்தாந்தப் பெருமன்றம், சென்னை , ஞான சம்பந்தன் (தருமை ஆதீனம்), மெய் கண்டார், (திருவாவடு துறை ஆதீனம்), செந்தமிழ்ச் செல்வி, (சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை ), இராம கிருஷ்ண விஜயம் (இராம கிருஷ்ண மடம், சென்னை ), தர்ம சக்கரம், ( திருப்பராய்த் துறை, ஆங்கில முத்திங்கள் இதழ் Saiva siddhanta சைவ சித்தாந்தப் பெருமன்றம், சென்னை.

சைவசித்தாந்த பரிபாடை - ஆசிரியர் சூரிய சிவாசாரியார்.

சைவசித்தாந்த முறை - உலகப் பொருள்களைப் பதி, பசு, பாசம் என்னும் மூன்றாகப்

135