பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சைவ சித்தாந்த வரலாறு

சைவ வழிபாடு


பகுப்பதும், தனு, சுரணம், புவனம், போகம் என்று உலகை நான்காகப் பிரிப்பதும் சைவத் திற்குப் புறம்பான சமயங் களைச் சற்காரிய வாதத்தினால் மறுப்பதும், மாயையை முதற் காரணமாகக் கொள்வதும் தத்துவங்களை 36 ஆக ஏற்ப தும், உயிர் மூவகை என்பதும் வேதத்தையும் (பொது) சிவாக மத்தையும் (சிறப்பு) தனக்கு முதல் நூல்களாகக் கொள்வ தும்சைவசித்தாந்த முறை.

சைவசித்தாந்த வரலாறு - சைவ வரலாறே சைவ சித்தாந்த வரலாறு. அது நீண்டது. நெடியது. வேதகாலத்திற்கு முற்பட்டது அதன் வரலாறு, வேதத்தை ஏற்றுக் கொள்ளாத மதங்கள் அவை திகமதங்கள் எனப்படும். அவை பௌத்தம், சமணம் முதலியவை. சிவனைச் சிறப் பிக்க எழுந்த ஆகமங்களே சிவா கமங்கள் அல்லது சைவ ஆக மங்கள், அவற்றின் வழிப்பட்ட சமயம் சைவம், சைவ சமயத்தில் தோத்திரங்களும் சாத்திரங் களும் உண்டு. தோத்திரங்கள் திருமுறை12.சாத்திரங்கள் மெய் கண்ட் நூல்கள் 14, பண்டார சாத்திரங்கள் 14. சாத்திரங் களில் தலைமையானது சிவ ஞான போதம். சாத்திரங்களும் தோத்திரங்களும் சைவத்தின் ஆணி வேர்கள். பாடியங்கள் வழி வளர்ந்த தத் துவ ஆராய்ச்சி தமிழ் நாட்டில் பரவிய நிலையில், சைவசித் தாந்த சாத்திரங்கள் தமிழில் தோன்றின. சைவசித்தாந்தம் வடமொழியிலுள்ள சைவாக மங்களையே மூலமாக உடை யது என்பது மரபு. உண்மையில் தமிழில் தோன்றிச் சிறப் புற்ற சித்தாந்த சாத்திரங்களால் தான் அது விளங்கி வருகிறது. ஆசிரியர்க்கு மாணாக்கர், மாணாக்காக்கு மாணக்கர் என இவ்வாறு வழிவழி வந்த அருளாளர்களது மரபினைச் சைவசித்தாந்த சாத்திரங்கள் கொண்டவை.

சைவ தீக்கை - சைவத்திற்குரிய மூவகைத் தீக்கை 1) சமய தீக்கை 2) சிறப்புத் தீக்கை 3) நிர்வாணத் தீக்கை பா, தீக்கை. சைவ நாதன் - மெய்கண்டார்.

சைவநூல் - சைவாகமம்.

சைவநெறி - இது வித்தகம் உடையது. மேம்பட்ட மெய் கண்ட சந்தான வழி வந்தது. சைவர் அனைவரும் மேற் கொள்ளும் நன்னெறி.

சைவ பஞ்சதபனம் - சைவத் திற்குரிய 5 உபநிடதங்கள் 1) காலாக்கினி ருத்திரம் 2) சுவே தாச்சுவதரம் 3) கைவல்லியம் 4) அதர்வசிகை 5) அதர்வசிரசு

சைவர் - சைவ சமயத்தவர் சைவர் எழுவர். 1) அனாதி சைவர் 2) ஆதிசைவர் 3) மகாசைவர் 4) அணுசைவர் 5) அவாந்தர சைவர் 6) பிரவர சைவர் 7) அந்நிய சைவர்.

சைவ வழிபாடு - சிவ வழிபாடு நோக்கம்; மெய்யுணர்வு பெறு வது மட்டுமன்றி, மெய்யுணர்வு பெற்றோரும் மேற்கொள்ளும் ஒழுக்கம். நாற்படிகள், 'இதில் சைவ சித்தாந்திற்கே உரிய சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கும் அடங்கும். விளக்கம்; கோயிலை வலம் வருதல்.

136