பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செளபல்யம்

ஞான சைவம்


சௌ

சௌபல்யம் - எளிமை

சௌத்திராந்திரகன் - சமயவாதி புத்த சமயத்தில் சௌத்திராந் திரிகப் பிரிவைச் சார்ந்தவன்.

சௌத்திராந்திகன் மதம் - புத்தரில் பேதிவாதி.

ஞா

ஞான ஆணையன் -வேதங்கள் பலவற்றையும் தனக்கு நான்கு கொம்பாகவும் பொருந்தி விளங்காநின்ற இச்சை, கிரியை, ஞானமே தனக்கு அங்கமான கொலு பானையை உடையவன்.

ஞான ஞேயங்கள்- அறியப்படும் அறிவுப் பொருள்கள்,

ஞாதிரு - உயிர், அறிபவன் (இறைவன்) ப. திரிபுடி

ஞாயிறு- கதிரவன்,

ஞாலம் - உலகம். இது கீழ் ஏழு மேல் ஏழு என இருவகை பா, உலகம்.

ஞான மதலை - இளமுருகன் அறிவிற் சிறந்தவன்,

ஞானம் - அறிவு, சத்திக்குப் பாரி யாய பெயர் பதி ஞானம், பசு ஞானம், பாசஞானம் என மூவகை திரிகாலஞானம், அடி சேர் ஞானம், அணிமொழி ஞானம் ஆகிய மூன்றும் பதி ஞானத்தில் அடங்குபவை. ஞானமே சமயம் சமயமே ஞானம் ஞானத்தால் கிட்டுவது வீடு, எல்லாவற்றிற்கும் மேலான ஞானம் சிவஞானம் அல்லது பதிஞானம் பா. திரிபுடி.

ஞான எரி - செருக்கை அழிக்கும் தீ

ஞானக்கண்- பதியறிவு, திருவடி, ஓ. ஊனக் கண்.

ஞானக் காட்சி - பதியறிவு.

ஞான காண்டம் - வேதத்தின் பாகம் ஞானத்தைக் கூறுவது

ஞானகுரு - குருவில் ஒரு வகை யினர். திருவெருளை உணர்த் துபவர்.

ஞானசத்தி - ஆற்றல் இல் ஒன்று. பேரறிவு ஆற்றல் ஆன் மாக்கள் இருவிசப் பயன்களை உணர்ந்து. ஒழித்து முத்தி எய்த உதவும் சிவனாற்றல். .

ஞான சரியை - பா. ஞானச் செய்திகள்.

ஞான சம்பந்தர் - பா. திருஞான சம்பந்தர்.

ஞான சாதனம் - பிறவா நெறி முறையில் ஞான நெறி அடை வதற்கு வேண்டிய பயிற்சி, ஞான சாத்திரம் - சமய அறிவு நூல்.

ஞானசித்தன் - மோட்ச சாதனத்தில் ஞானம் நிறைந்தவர்.

ஞானசீலம் - ஞான ஒழுக்கம். இது சமாதியின் உறுதி.

ஞானச் செய்திகள் - இவை நான்கு 1) ஞானத்தில் கிரியை - ஞான நூற் பொருளைக் கேட்டல். அண் ணலை வணங்கி, அவர் மெய்யே கண்டு பேரின்பமடைதல், ஞானத்தில் சிரியை - கேட்ட ஞான நூல் பொருளைச் சிந்தித்தல். 3) ஞானத்தில் யோகம் - ஞானத்தில் சித்தித்ததைத் தெளிதல் 4) ஞானத்தில் ஞானம் ; ஞான நிட்டை கூடுதல் பாஞானவகை.

ஞான சைவம் - சைவம் 16இல் ஒன்று .

139