பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞான விளைவு

தடக்கை


அஞ்ஞானம், வாசக ஞானம், வாச்சிய ஞானம், திருஞானம் தங்கிய ஞானம், சங்கற்பனை ஞானம், கடந்த ஞானம், அணி மாதி ஞானம், அடிசேர் ஞானம், திரு (சிவ) ஞானம், எல்லாவற் றையும் கடந்த ஞானம். திரு ஞானம் ஆகவே, சீவன் முத்தர் சிவமே கண்டிருப்பர்.

ஞான விளைவு - உயிரின் இளைப்பு நீங்க இ.தவுவது. மக்கள் நல்வாழ்வுக்கு உதவுவது. துன்பத்தை நீக்குவது.

ஞானி, ஞானியர் - ஞான வாழ்வினர். முக்காலம் உணரும் வித்தகர்கள்.

ஞானேந்திரியங்கள் -ஞான இந்திரியங்கள். அறிவுப் பொறி களாகிய ஐம்பொறிகள்.

ஞே

ஞேயம் - அறியப்படும் பொருள் (கடவுள்). பா.ஞானம் ஞேயம் திரிபுடி.

தகவு -வலிமை.

தக்கன் - பிரமன் மானசபுத்திரர்களில் ஒருவன்.

தக்கன் வேள்வி -தக்கன் யோக புண்ணியம் தீமையில் முடிந்தது. அன்பிலார் புண்ணியம் பாவமாகும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.ஒ. பாலன் செய்த பாதகம்.

தகுதி வழக்கு - இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என மூன்று

தங்கும் - அடங்கும்

தசம் - பத்து.

தச அவதாரம் - இறைவனின் பத்துப் பிறப்புகள், 1) மத்சயம் தடக்கை 2) கூர்மம் 3) வராகம் 4) நரசிங்கம் 5) வாமனன் 6) பரசு ராமன் 7) இராமன் 8) பலராமன் 9) கிருட்டிணன் 10)) கல்கி.

தசகாரியம் - சிதம்பரநாத தேசிகர் இயற்றிய சைவ சித்தாந்த நூல்.

தசி காரியம் - பத்துச் செயல்கள் அல்லது முயற்சிகள். 1) தத்துவ ரூபம் 2) தத்துவ தரிசனம் 3} தத்துவசுத்தி 4) ஆன்மரூபம் 5) ஆன்ம தரிசனம் 6) சிவயோகம் 7) சிவபாசம் 8) ஆன்ம சுத்தி 9)சிவரூபம் 10) சிவதரிசனம் உண்மை நெறி விளக்கம் இவற்றை நன்கு விளக்குகிறது.

தசவாயுக்கள் - பத்து வளிகள். 1) பிராணன் - இதயத்தில் இயங்குவது. 2) அபானன் -உச்சலத்தில் நிற்பது. 3) உதானன் - நாபியில் நிலைபெற்று நிற்பது. 4) வியானன் -உடல் முழுவதும்பரவி இருப்பது. 5) நாகன் - முடக்கல், நீட்டல், கிளக்கல் 6) கூர்மன் - மயிர் கூச்செரிவது 7) சமானன்-கந்தரக்குழியடைச்சாதுவின் பால் நிற்பது. 8) கிருகரன் தும்மல் சினம், செம்மை. 9) தேவதத்தன் - ஒட்டம், இளைப்பு, வியர்த்தல், 10) தனஞ்செயன் உயிர்போகினும் வேகாது உடலினை விக்கித் தலைகிழித் தகல்வது.

தஞ்சம் - அடைக்கலம்.

தடக்கை - வளைந்தகை, பெரிய கை,

141