பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருஞான சம்பந்தர்

திருநாவுக்கரசர்



இறுதியாகப் பாடியது "காதலாகி" காலம் கி.பி. 7ம் திரு முறை. 1-3. முத்தியடைந்த அகவை.16. சிறப்புப்பெயர்கள் காழிவேந்தர், சைவ சிகாமணி, நான்மறையின் தனித்துணை. வேறுபெயர் சம்பந்தர். இவர் தம் பதிகங்களில் மொழி மாற்று, மாலை மாற்று போன் றவை தமிழ் மொழிக்கு மூல இலக்கியங்களாக உள்ளன. திருஞான சம்பந்தர் செய்த அற்புதங்கள் : 1) 3 வயதில் சீர்காழியில் உமாதேவியிடம் முலைப்பால் உண்டு பதிகம் பாடியவர்.

2) சிவபெருமானிடத்தில் திருக் கோலக்காவில் பொற்றாளமும் திருப்பட்டீச்சுரத்தில் முத்துப் பல்லக்கும் முத்துக்கிண்ணமும் முத்துக் குடையும் முத்துப் பந்தரும் திருவாவடுதுறையில் உலவாக்கிழியும் பெற்றார்.

3) திருமறைக் காட்டில் திருக்கதவு அடைக்கப் பாடியது.

4) பாலையை நெய்தல் ஆகும்படி பாடியது.

5) ஆண் பனைகளைப் பெண்பனைகளாக்கியது.

6) பாண்டியனுக்குக் கூனையம் காய்ச்சலையும் போக்கியது.

7) சமணரோடு அனல்வாதம், புனல் வாதம் புரிந்து, தேவாரத் திருவேட்டை நெருப்பிலிட்டுப் பச்சையாய் எடுத்தது.

8) மதுரையில் வைகையிலே தேவாரத்திருவேட்டை இட்டு எதிரேறும்படிச் செய்தது.

9) பத்த நந்தியின் தலையிலே இடிக்கச் செய்தது.

10) முள்ளிவாய்க்கரை நின்று வெள்ளப் பெருக்கிலே ஆற்றிலே தாமும் அடியாரும் ஏறிய ஒடத்தைத் திருப்பதிகத்தினாலே செலுத்தித் திருக்கொள்ளம்பூதூர் சேர்தல்.

11) திருமயிலையில் இறந்த பெண்னினது எலும்பைப் பெண்ணுருவாக்கியது.

12)நஞ்சினால் இறந்த செட்டியை உயிர்ப்பித்தது.

13)சிவபெருமானிடத்தில் படிக்காசு பெற்றது.

14)தம் திருமணத்தைக் காண வந்தவர் எல்லோரையும் தம் மோடு நெருப்பிலே புகுவித்து முத்தியிலே சேர்த்தது.


திருஞான சம்பந்தரும் மெய்கண்டாரும் - சம்பந்தர் குழந்தைப்பருவத்திலேயே தேவாரம் பாடி அருளினார். மெய்கண்டாரும் தம் குழந்தைப் பருவத்திலேயே தத்துவ ஞானியாக விளங்கிச் சிவஞானபோதம் அருளினார்.இருவருக்கும் சிறப்புப்பெயர் சைவ சிகாமணி,


திருஞானம் - 1) திரு அறிவு 2) கோயில் சந்நிதியில் ஒதும் தேவாரம் போன்ற பாடல்.


திருட்டாந்தம் - உவமை, எடுத்துக்காட்டு.


திருத்தொழில் - திருத்தாண்டவம்.


திருநாவுக்கரசர் - வேளாளர். திருவாமூர் - திருநாடு சிறப்புப் பெயர்கள்; தாண்டக வேந்தர், உழவாரப் படையாளி-வேறு பெயர் அப்பர். முதலில் பாடிய பதிகம் "கூற்றர்யினவாறு”. படி, ஞானத்தில் சரியை நெறி, அடிமை நெறி. முத்தி நிலை, சாலோகம் பாடிய பதிகம் 49,000 இன்றுள்ள பாடல்கள் 3066. திருமுறை 4-6, இறுதியாகப் பாடிய பதிகம் எண்ணு

151