பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணு சதாசிவர்

அத்தியான்மிகனை


 அணு சதாசிவர் - சாதாக்காய தத்துவத்தால் இன்பம் நுகரும் ஆன்மாக்கள்.

அணு சைவம் -16 சைவ வகையில் ஒன்று.

'அணு நான்கு -நான்கு ஆன் மாக்கள். பிருதிவி, அப்பு, தேயு, வாயு.

அணுபட்சம் - புண்ணியங் காரணமாக முதற்கடவுளது தொழில்களுள் ஒரோ ஒன்றைப் பெற்று நிற்கும் கடவுளர் பகுதி அணு பட்சம் ஆகும்.முத்தொழிலின் முதன்மையையும் ஒருங் குடைய முதல்வன் அருள் காரணமாக மூவராய் நிற்கும் நிலைகள் சம்பு பட்சம் ஆகும்.

அனுபரிமாணம்-அணு அளவு. பாஞ்சராத்திரிகள் உடம்பிலே ஆன்மா அணுவாய் நிற்கும் என்பர்.

அணுப்பாகுபடு - அணு வகைப்பாடு. அணு ஐந்து, நான்கு, மூன்று என வகைப் பாடு செய்தல்.

அணு மூன்று - சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர்.

அணுவதம் ஐந்து -கொல் லாமை, பொய்யாமை, களவா டாமை, காமுறாமை, பொருள் விரும்பாமை,

அணை -வரம்பு

அணை சகலன் - சகலான்மா.

அணைதல் - பற்றி நிற்றல்.

அணைந்தோர் - சீவன் முத்தர் உயிர்களிடத்துப் பரிவுடையவர்கள். குரு அருள் பெற் றவர்கள். ஞானம் நிகழ்ந்த செம்மையர்.

அணையும் - நுகரும்.

அதர்வணம் - 4 வேதங்களில் ஒன்று.

அதர்வணன் - சிவன்.

அதன்மம்-அதர்மம் ஒ. தர்மம்.

அதன்மாத்தி காயம் - பொருள்களையும் செய்யும் இயல்பு.

அத்தம் - அதை எ-டு அத்தம் ஒன்றையும் உணர்ந்திடான் (சிசி பப 153).

அத்தர் - சிவன், தேவர்.

அத்தன் - பரம்பொருள், குரு.

அத்தன்தாள் - இறைவன் (குரு) திருவடி

அத்தாணி மண்டபம் - அரச இருக்கை மண்டபம்,

அத்தன்தாள் - இறைவன் (குரு) திருவடி

அத்தால்-அது சிவ ஆற்றலுக்கு ஆகாமையால்.

அத்தான்-இறைவன். எ-டு வந்து ஒத்தான் அத்தான் மகிழ்ந்து (தி ப 33),

அத்தி - 1. அத்திப்பழம் 2.ஓர் அசுரன் 3, எலும்பு.

:அத்திதி - 'அந்தத் திதிக்கடவுள்.

அத்தியாச வாதம் - இப்பியை (சங்கை) வெள்ளி என்பது போல ஒன்றைப் பிறிதொன் றாகக் கூறும் திரிபுள்ள வழக்குரை. சங்கராசாரியரின் மூன்றுவாதங்களில் ஒன்று.

அத்தியான்மிகம் - 1, 3 கருடன் களில் ஒன்று 2. சைவாகமங் களில் ஒரு பகுதி 3 ஆன்மா பிறரால் அடையும் துயர்.

அத்தியான்மிகனை - 5 வினைகளில் ஒன்று. சிவ பூசை முதலியன செய்தல். வித்தியா கலையில் அடங்கும். சுத்தமும் அசுத்தமும் கலந்த போகங் களைத் தரும்.

9