பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன்மதம்

நையாயிகம்


நூன்மதம் - 1) உடன்படல் 2) மறுத்தல் 3) தாஅன் நாட்டித்தனாது நிறுத்துதல் 4) பிறர் மத மேற்கொண்டு களைதல் 5) இருவர் மாறுகோள் ஒரு தலைத்துணிதல் 6) பிறர்நூல் குற்றங்காட்டிடல் 7) பிறிதொருபடா அண் தன்பதம் கொள்ளல் என 7.

நூனாதிகம்- குறைகூறும் இயல்பு. எ-டு அரசன் கன்மம் நூனாதிகம் அற்று (சிசிபப 134).

நூன்முகம் - நூல் முகவுரை.

நெ

நெஞ்சுவிடுதூது- 14 மெய்கண்ட நூல்களில் ஒன்று. ஆசிரியர் உமாபதி சிவாசாரியார். 129 கண்ணிகளால் அமைந்த கலி வெண்பாவால் அமைந்தது. இதில் இவர் தம் ஞான குருவாகிய மறைஞான சம்பந்தரிடம் சென்று தம் நிலை உணர்த்தித் திருக்கொன்றை மாலை வாங்கி வருமாறு தம் நெஞ்சைத் தூது விடுக்கின்றார். பொதுவாகத் தூது, தமிழ் மொழிக்கு உரியவையான 96 பிரபந்த வகைகளுள் ஒன்று.

நெடுமுரசோன் - சிவன், போராலியே பெரிய பேரிகை ஒலியாய் உடையவன்.

நெறி - வழி, ஒழுக்கம்,விதி, சமயம். எ-டு நன்னெறி, நெறிமுறை.

நெறி அறுவகை- அறுவகைச் சமயங்கள் எ-டு நெறி அறுவகையும் மேலோடு, கீழடங்க (இசிசு 297).

நெறி நிலம் நான்கு- மருதம், முல்லை, நெய்தல், குறிஞ்சி.

நெறியிலா அறங்கள்- ஐராதமவாதம், அகத்திருவாதம் முதலியவை.

நே

நேச நாயனார்- சாலியார். காம்பிலி நகரம்- பெல்லாரி மாவட்டம். மனத்தால் சிவனை நினைந்து வாக்கால் திருவைந்தெழுத்து ஒதியும் மெய்யால் அடியவருக்குக் கோவணமும் நீளுடையும் நெய்து கொடுத்து வந்தவர். சங்கம் வழிபாடு (63).

நேசத்தார் - அன்பர்.

நேசம் - பத்தி.

நேயம், நேசம்- அன்பு எ-டு மனித நேயம்.

நேயம் மலிந்தவர் வேடம்- அன்பு மிக்க அடியார் சிவவேடம். எ-டு மால்அற நேய(ம்) மலிந்தவர் வேடமும் (சிபோதுபா 12).

நேர் - ஒப்ப, வழிபாடு, அருட்பார்வை, பூசனை செய்.

நேர்த்தி முத்திரை- சைவ சமய முத்திரைகளில் ஒன்று.

நேர் நிற்றல் - ஒப்ப நிற்றல்.

நேரியன்- ஒப்பற்றவன். எ-டு நேரி யனாய்ப்பரியனுமாய் உயிர்க்கு உயிராய் எங்கும் (சிசிசுப280).

நேரிழையாள் - ஆரணங்கு.

நை

நைட்டிக தீக்கை - சபீச தீக்கை வகை

நைத்திகம், நைத்தியம்- நித்திய தத்துவம்.

நைமித்திகம்- ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்புப் பூசைகள.

நைமித்திய காமியம் - சிறப்புப் பொருள்.

நையாயிகம்- கெளதமர் இயற்றிய நியாய நூல் கொள்கை. ஒருமதம்.

173