பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முண்டன்

பண்பு வகை


முண்டன் - சைவன்.

முத்தர் - மலம் நீங்கியவர்.

முதலி - முதல்வன்.

முதல்- தோற்றம், இறைவன் முழு முதலை வணங்குக.

முதல் ஆசிரியன் - இறைவன் தனக்கு யாரும் குரு இல்லாமல் தானே எல்லாவற்றையும் செய்யும் அறிவன். ஞானம் அருளப் பெற்றவர்களால், அவன் அருள் உலகத்தில் வழிவழி வருவது என்ப்து கொள்கை, கல்லால் நிழற்கடவுளே முதல் ஆசிரியன். இவர் நந்தி பெருமானுக்கு அறிவு வழங்கினார்.

முதல் காரணம் - காரணப்பொருள். பா. காரணம்.

முதல் காரண வாதம் - இறைவனே உலகத்திற்கு முதற்காரணன் என்னும் கொள்கை.

முதல் குரு- முதல் ஆசிரியன், இறைவன்.

முதல் நான்கு - தூல உடல், சூக்கும உடல், காரண உடல், யாதான உடல். எ-டு மூல உடம் பாகும் முதல்நான்கும் (திப37)

முதல் வந்த முவர் - பிரமர், சத்திரியர், வைசியர்.

முதல்வ - முதல்வனே.

முதல்வன் - இறைவன்.

முதல்வன் இயல்புகள்- நிர்குணன், நின்மலன், நித்யானந்தன்.

முதல்வன் இலக்கணம் - சித்தாலும் சத்தாலும் உடையவனாய் நிற்றல்.

முத்தம் - முத்து.

முத்தன்- மலம் நீங்கியவன், இறைவன்.

முத்தி- பொருள்; வீடுபேறு, ஆன்மாஆணவத்திலிருந்து நீங்கி, இறைவனோடு இரண்டறக் கலத்தல்.

வகை

பண்பு வகை- 1) இம்மை முத்தி ஏந்திழையார் முத்தி, சிற்றின்பம் உலகில் துய்ப்பது. 2) குண முத்தி தீயகுணங்களை நீக்குவது. அட்டகுண முத்தி.

இறைநிலை வகை: 1) சலோக முத்தி 2) சாமீப முத்தி 3) சாருப முத்தி 4) சாயுச்சிய முத்தி 5) சீவன் முத்தி - சீவத் தன்மை விடுபடுதல் 6) அதிகார முத்தி. அதிகார சிவத்தை அடைந்து உடல்பற்றை விடுதல் 7) போக முத்தி போக சிவத்தை அடைந்து உலகப்பற்றை விடுதல் 8) இலய முத்தி இலயசிவத்தை அடைந்து மலமாயா கன்மங்களை விடுதல் 9) பரமுத்தி சிவத்தை அடைந்து பாசப் பற்றை விடுதல்.

சித்தியார்வகை: 1) ஏந்திழையார் முத்தி 2) ஐந்துகந்தம் அறக் கெடுகை முத்தி 3) சுவர்க்க முத்தி, 4) அட்டகுணமுத்தி 5) பாடாணம் போல்கை முத்தி 6) விவேக முத்தி 7) தன் மெய், வடிவாம் சிவத்தைச் செம்மையே பெறுகை முத்தி 8) சிவனடி யைச் சேரும் முத்தி விளக்கம் அவ்வதி தலைப்பில் காண்க.

சிவப்பிரகாசம் வகை: 1) அரிவையர் இன்புறும் முத்தி 2) ஐந்து கந்தம் அறும் முத்தி 3) திரி குணம் அடங்கும் முத்தி 4) விரிவு வினை கெடும் முத்தி 5) மலம்போம் முத்தி 6) விக்கிரக நித்த முத்தி 7) விவேக முத்தி 8)பரவும் உயிர்கெடுமுத்தி 9) சித்த முத்தி 10) பாடாணமுத்தி 11) அருள் சேர் முத்தி 12) திகழ் முத்தி.

219