பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முனைவன்

மூலப் பிரகிருதி


முனைவன் - முதல்வன்.

முன்னை நாள்- முதல் நாள்.

முன்னை முதல் இல்லோன் - தனக்கு மேல் ஒரு வினை முதல் இல்லாதவன்.

முனிகணம் - முனிவர் கூட்டம். சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வர் மாணவராக உள்ளவர்.

முனி மரபு - இறைமை.

முனிவு - சினம், ஒறுத்தல் எ-டு ஈசனார் முனிவு.

முனையடுவார் நாயனார் - வேளாளர் நீடூர்-சோழநாடு போரில் பகைவரை வென்றும் பிறர்க்குத் துணையாய் நின்று வெற்றி வாங்கித் தந்தும் பெற்றபொருளால் சிவனடியார்க்கு அன்னம் பாலித்து வந்தவர். சங்கம வழிபாடு (63).

முனைவன் - கடவுள், புத்தன்.

மூ

மூ - மூன்று.

மூட்சி- மூளுதல்.

மூடருபம் - முடமாய் இருக்கும் தன்மை.

மூத்திராதி - சிறுநீரக உறுப்பு.

மூத்தோர் - அடிகள், ஆசான், தலைவன், ஐயன், பெருமான்.

மூர்க்க நாயனார் - வேளாளர். திருவேற்காடு தொண்டை நாடு. சூதாடி அதிற் கிடைத்த பொருளை எல்லாம் அடியவர்க்கு அமுதுாட்டுவதற்குச் செலவு செய்தவர். சங்கம வழிபாடு (63).

மூர்ச்சை - மயக்குவது.

மூர்த்திநாயனார் - வணிகர். (மதுரை) பாண்டி நாடு. திருஆலவாய் இறைவனுக்குச் சாத்தச் சந்தனம் அரைத்து வந்தவர். இலிங்க வழிபாடு (63).

மூல அருங்கட்டில் - மூலாதாரமாகிய கட்டில்.

மூலஅவத்தை- கேவலம், சகலம், சுத்தம் ஆகிய மூன்றும்.

மூல உடம்பு - முதல் உடல் 31 தத்துவமும் மூல உடம்பு. வித்தியா தத்துவம் 7, ஆன்ம தத்துவம் 24.

மூலம்- முதல், முனை, இறை சித்தம் எ-டு மூலநூல், முதல் நூல் துரியாதீதம் எனப்படும் மூலாதாரம்

மூலம்ஐந்து- 1) வில்வவேர் பெருங் குமிழம் வேர், தழுதாழை வேர், பாதிரிவேர், வாகைவேர். இவை பெருபஞ்சமூலம் 2) கண்டங்கத்திரி வேர், சிறு மல்லிவேர், பெருமல்லிவேர், சிறுவழுதுளைவேர், நெருஞ்சி வேர் இவை சிறு பஞ்சமூலம்

மூல கன்மம்- அனாதியே ஆன்மாவைப் பற்றியுள்ள கன்மம்.

மூலகாரணம்- முதல் காரணம்.

மூலநோய் - ஆணவ மலம்.

மூலபஞ்சாக்கரம்- நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தாகிய மந்திரம்.

மூலப்பிரகிருதி- பொருள் மூலப்பகுதி, மூலம்

கொள்கை

1) சாங்கியர் கொள்கை கலை என்னும் தத்துவத்திலிருந்து வித்தை, அராகம் ஆகிய இரண்டும் தோன்றியபின் பிரகிருதி தோன்றுவது. "இது எல்லாவற் றிற்கும் மூலம் இஃது அநாதி ஆகும். ஒன்றிலிருந்து தோன்றியது அன்று” என்பதுசாங்கியர்

222