பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெய்கண்டார் மறுக்கும்

மெய்ஞ்ஞானக் கண்


மையங்கள். ஆக இவையனைத்தும் சைவசித்தாந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.

மெய்கண்டார் மறுக்கும்- மதங்கள்-மெய்கண்டார் 11 நூற்பாக்களில் 42 மதங்களைச் சற்காரிய வாதங் கொண்டு மறுக்கின்றார். 12ஆம் நூற்பாவில் மத மறுப்பு இல்லை. நூற்பா 1-4இல் பத்தும், 5இல் இரண்டும் 6இல் ஏழும் 7இல் ஒன்பதும் 8இல் ஐந்தும் 9இல் இரண்டும் 10இல் ஒன்றும் 1இல் ஆறும் ஆக 42.

மறுக்கப்படும் மதங்கள்- அகரவரிசையில் பின்வருமாறு.

1. அநேக அந்தவாதி

2. அநேக ஈசுரவாதி

3. அந்தக்கரண ஆன்மவாதி

4. ஆவேசவாதி

5. இந்திரிய ஆன்மவாதி

6. இரணிய கருப்பவாதி

7. ஈசுவர அவிகாரவாதி

8. உலகாயத வாதி

9. உற்பத்திவாதி

10. ஏகான்மவாதி

11. ஐக்கியவாத சைவம்

12. கடவுளர்

13. கீரீடாபிரம வாதி

14. சமூக ஆன்மவாதி

15. சமணா

16. சாங்கியர்

17. சிவசங்கிராந்தவாத சைவர்

18. சீவாத்துவித சைவர்

19. சீவசமவாத சைவர்

20. சித்த ஆன்மவாதி

21. சுத்த சைவர்

22. சூனிய ஆன்மவாதி

23. சூக்குமதேக ஆன்மவாதி

24. தூலதேக ஆன்மவாதி

25. நையாயிகர்

26. பரிணாமவாதி

27. பாஞ்சராத்திரி

28. பாசுபதவாதி

29. பாடானவாதி

30. பாட்டாசாரியர் மதம்

31. பாதஞ்சலர் மதம்

32. பிராண ஆன்மவாதி

33. புத்தர்

34. பேதவாத சைவர்

35. பெளராணிகர்

36. மாயாவாதி

37. மாத்துவர்

38. மீமாஞ்சகர்

39. முதற்காரணவாதம்

40. யோகசாரன்

41. விஞ்ஞான ஆன்மவாதி

42. வைசேடிகர்.

மெய்கண்டார் மாணவர்கள் - இவர்கள் 49 பேர். இவர்களில் அருணந்தி சிவாசாரியார். மனவாசகங்கடந்தார், சிற்றம்பல நாடிகள், கண்ணுடைய வள்ளலார் என்னும் நால்வர் பெயர் தான் நன்கு தெரிகிறது.

மெய்கண்டான் - உண்மையறிந்த மெய்கண்டார்.

மெய்ஞ்ஞானி- மெய்யறிவாளர்.

மெய்ஞ்ஞானிக்கு ஆகாதவை- புண்ணிய பாவங்களின் பயனாயும் காரணமாயும் பொருந்துகின்ற கன்ம மலமும், மண் முதல் மோகினி ஈறாகச் சொல்லப்படுகின்ற மாயாமலமும், விபரீதமாகிய சுட்டறிவைப் பயக்கின்ற ஆணவ மலமும் மெய்ஞ்ஞானிகளுக்கு ஆகாதவை. ஆதலின், இம்மூன்றையும் அவர்கள் விடல் அறிவுடைமையாகும்.

மெய்ஞ்ஞானம்- மெய்யறிவு, மெய்யுணர்வு சிவம். ஒ. அஞ்ஞானம்.

மெய்ஞ்ஞானக் கண் - மெய்யறிவு ஒளி. ஒ. ஊனக்கண்.

226