பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யோனி

வடமொழி மதம்


யோனி- உற்பத்திக் காரணி இது 84,00,000 என்று பகரும் சிவஞான சித்தியார் (சிசிசு 179) 40,000 என்று கூறும் சிவப்பிரகாசம் (சி.பி. 47)

யோனி பேதம் - 84,00,000.

ரசம் - சுவை.

ரா

ராகம்- பண், கவலை.

ராசகேசர சூரி- சைன ஆசிரியர். கி.பி. 14

ராசீகரர்- இறைவன் 28 அவதாரங்களில் ஒன்று.

ராம கண்டர்- சித்தாந்த சைவ ஆசாரியார். பா. அகோரா சாரியார்.

ரூ

ரூபகம்- ஏழுவகைத் தாளங்களில் ஒன்று.

ரூபம்- 1) வடிவம்: உருவம், தன் மாத்திரை 5இல்1 2) பொதுக் காட்சி

ரே

ரேவணசித்தர்- பழைய வீரசைவ ஆசாரியார்.

லகிமா- எண் சித்திகளில் ஒன்று. உடலை மிகவும் இலேசாகக் கொள்ளுதல். ஒ. கலிமா

லகுதை- நொய்மை, ஒரு குணம்.

லலிதாதித்தியன்- காச்மீர அரசன் கி.பி. 8. காச்மீர சைவம் வளர உதவியவன்.

வகை - கூறுபாடு, பாகுபாடு.

வசனாதி- 11 புறநிலைக் கருவிகளில் வசனம் (வாக்கு), கமனம் (பாதம்), தானம் (பாணி), விசர்க்கம் (பாயு), ஆனந்தம் (உபத்தம்) ஆகிய ஐந்தையும் கொண்டது. இவற்றிற்கு முறையே தமிழ் பின்வருமாறு: மொழி, கால், கை, எருவாய், கருவாய்.

வசன்- ஒரு நிலைக்கு உள்ளாகும் இறைவன் தன்வசன் நின்வசன், பரவசன் என மூவகை.

வசனிக்கும்- வசனத்தைச் சொல்லும் ஒ. நிர்வசனம்.

வச்சிரம்- ஒரு கருவி, எ-டு குறிகள், வச்சிரத்தினோடு (சி.சி.சு 158),

வசித்துவம்- எண் சித்திகளுள் ஒன்று. எல்லா உலகங்களையும் தன் வயப்படுத்துதல்.

வசிட்டர் - ஏழு முனிவர்களில் ஒருவர்.

வசிப்பில் - குற்றமிலா. எ-டு வசிப்பில்நான்மறைகள் சொன்ன

வசீகரித்தல் - வசப்படுத்துதல்.

வஞ்சம்- சூழ்ச்சி, வஞ்சனை.

வஞ்சமணர்- சூழ்ச்சியுள்ள சமணர்.

வடகண்டம்- வடபுலம்.

வடங்கொண்ட- முத்து வடம் தாங்கிய.

வடம்- புலன், பற்று. எ-டு வடம் போல அடக்கி நிற்கும் வட விடத்தே (திப 48) கதிர் நிலா வடங்கொள்ள (சிசிபப 30)

வடமொழி மதம்- வடநூல் கொள்கை.

231