பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அப்பா

அபேதிகள்


சரியை, நெறி, அடிமை நெறி,முத்திநிலை சாலோகம் பாடிய பதிகத் தொகை 49,000 இன் றுள்ள பாடல்கள் 3066 (63), திருமுறை 4-6, இறுதியாகப் பாடியது. "எண்ணுகேன் என் சொல்லி, முத்தியடைந்த அகவை 81 காலம் கி.பி. 6-7 நூற்றாண்டுகள்.

அப்பா - மகனே, அப்பனே.

அப்பிரகாசம் - எதனாலும் அறி யப்படாதது, அசித்து, சூனியம் காட்சிக்குப்புலனாகாதது. எ-டு முயற்கோடு, ஆகாயத்தாமரை ஒ. பிரகாசம்.

அப்பிரசித்தம்-விளக்கமின்மை, ஒ. பிரசித்தம்

அப்பிரமேயம் - அளவையால் அளக்கப்படாதது.

அப்பு-சிவம், நீர் ஐம்பூதங்களில் ஒன்று.

அப்பூதியடிகள் - மறையவர். திங்களுர் - சோழநாடு நாவுக் கரசர் பேரில் தண்ணிர்ப் பந்தல் அமைத்துத் தொண்டு செய்தவர். குருவழிபாடு.(6.3) அப்பைய தீட்சதர் - கி.பி. 16 ஆம் நூற்றாண்டு. பூரீகண்டா பாஷ்யத்திற்குச் சிவார்க்க மணி தீவிகை என்னும் அரிய உரைநூல் எழுதியவர்.

அப்ஜம் - நீர்

அபாவஅளவை-ஒரு பொருள் இல்லாமை பற்றிக் கூறும் பிரமாணம்

அபாவத்தே-இல்லாத இடத்து

அபாவம் - 1. இன்மை, எ-டு அருஞ்செயலின் அபாவத்தே (சிசி பப 205) 2. அளவை 8 இல் ஒன்று.

அபானன்-10 வளிகளில் ஒன்று.

அபிடேகம் - சமய விசேட நிருவாணம் பொருந்திய திரு முழுக்கு என்னும் நான்கு வகைத் தீட்சை.

அபிடேகப் பொருள்கள் - இங்குக் கொடுக்கப்பட்டிருப் பவை நிறை நிலவு நாட்களில் ஒவ்வொரு திங்களும் பயன்படுத் தப்பட வேண்டியவை 1. மருக் கொழுந்து சித்திரை 2.சந்தனம் வைகாசி3 முக்கனி ஆனி 4ஆவின் பால்-ஆடி 5.சர்க்கரைஆவணி 6. அதிரசம் - புரட்டாசி 7 அன் னம் - ஐப்பசி 8 தீபம் கார்த் திகை 9.பசு நெய் மார்கழி 10, கருப்பஞ்சாறு - தை 11. கம் பளம், இளவெந்நீர் மாசி 12 பசுந்தயிர் பங்குனி

அபிநவகுப்தர்- காச்மீர சைவத்தை நிறுவியவர். கி.பி. 8 ஆம் நூற்றாண்டு.

அபிமுக மாத்திரை - சந்நிதி மாத்திரை.

அபுத்தி பூருவம் -அறியப்படாதது.

அபூர்வம்-அரும்பொருள். எடு அருஞ்செயலின் அபாவத்தே அபூர்வம் எனும் அது தோன்றித் (சிசிபப 205).

அபேதம் - வேறில்லாத நிலை. அபேதசித்தாந்தம்-ஆன்மாவும் சிவமும் ஒன்று என வாதிக் கும் மாய வாதக்கோட்பாடு.

அபேத வாதம் - பா. அத்துவிதக்கொள்கை

அபேதவாதி-'அத்துவைதி

அபேதிகள் - மாயாவாதிகளான அபேதவாதக்கொள்கை யினர். சீவான்மாவும் பரமான் மாவும் ஒன்றெனக் கூறும் கொள்கை.

16