பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழிபாட்டு வகை

வாக்கு மனாதீதமாய்


வழிபாட்டு வகை - இடவகை வழிபாடு: 1) தனி வழிபாடு; தன் பொருட்டு இல்லத்தில் நடைபெறுவது. 2) கூட்டு வழிபாடு; பிறர் பொருட்டுக் கோயிலில் நடைபெறுவது. கோயில் வழிபாடு மக்கள் தொழில் அனைத்திற்கும் மையமாக இருப்பது போல், தனி வழிபாடும் பிற செயல்களுக்கு மையமாக அமைதல்வேண்டும். 3) உருவ வழிபாடு- 1) இலிங்க வழிபாடு 11) குருவழிபாடு 111)சங்கம வழிபாடு.

வழிமொழிதல்- அநுவதித்தல். பரிந்து கூறுதல்.

வழு- குற்றம்.

வழுவிலா- குற்றமிலா.

வழுவிலா ஆறு - பா.அத்து வாக்கள்.

வளர்ச்சி - பா. சுத்த மாயை

வள்ளமை- வளமிகுந்த அருளின் தன்மை

வள்ளல்- 1) இறைவன் 2) கொடைஞர்.

வள்ளல்கள், இடை ஏழு- அந்தி மான், சிசுபாலன், அக்குரன், வக்கிரன், சந்திமான், கன்னன், சந்தன்.

'வள்ளல்கள், கடை ஏழு- பாரி, எழிலி, நள்ளி, ஆய், மலையன், ஒரி, பேகன்,

வள்ளல்கள், முதல் ஏழு- சகரன், கர்ரி, நளன், துந்துமாரி, திருதி, செம்பியன், விராடன்.

வளார்- மிலாறு.

வளி - வாயு, காற்று.

வளிக்கூறு- உதானன், பிராணன், அபானன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனப் பத்து.

வளைதல் - தனக்குட்படுதல்.

வறட்டுப் பசுக்கள்- வறண்ட உயிர்கள்.

வறிது - சும்மா

வன் பகை- வலிய பகை, எ-டு பவநணிை வன்பகை கடந்த (சிபோ சிறப்புப் பாயிரம்)

வன்றொண்டன்- சுந்தரமூர்த்தி பரவைக்காகச் சிவபெருமானைத் தூதராக அனுப்பியவர் (திப 72)

வன்னம்- வண்ணம், எழுத்து, படம்

வன்னபேதங்கள்- பலவகை நிறங்கள், பலவகை உலகங்கள்.

வன்னி - நெருப்பு.

வா

வாக்காதி- வாக்கு, பாணி, பாதம், பாயு, உபத்தம் என 5 தொழிற் பொறிகள்.

வாக்கியம்- அவாய் நிலை, தகுதி, அண்மை ஆகிய மூன்றும் உடைய சொற்களின் சமூகம். சுருதியும் இலிங்கமுமின்றிச் சொற்றொடர் பற்றிப் பொருள் உரை வருவது.

வாக்கியசேடம்- வாக்கியக் குறை. அதாவது, ஒரு வாக்கியத்தை ஐயமறத் துணிவதற்கு ஏது வாகிய குறை வாக்கியம்.

வாக்கு- 1) சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என நான்கு வகை. 2) மொழி: செயற் பொறி 5இல் 7.3) பாச அறிவு.

வாக்கு மனாதீதமாய்- பாச ஞான பசு ஞானங்களுக்கு அப்பாற்பட்டது.

234