பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாசகம்;வாசகத் தீக்கை

வாய்பாடு


வாசகம், வாசகத்தீக்கை - தீக்கை 7இல் 1.அஞ்செழுத்தை 11 மந்திரங்களுடன் உச்சரிக்கும் முறையைக் குரு தம் சீடனுக்கு செய்தல். உபதேசிக்கும் தீக்கை.

வாசம் - மணம்.

வாசல் திறப்பித்தல் - திருநாவுக்கரசர் திருமறைக் காட்டில் திருக்கதவு திறக்கப் பாடியது.(தி.ப.71)பா.திருநாவுக்கரசர் செய்த அற்புதங்கள்.

வாசனா மலம் -ஆணவ மலம்.

வாசனை -கந்தம்,மணம்.

வாசி-வகாரம் ஆகிய அருள் சிகாரம் ஆகிய சிவத்தைக் காட்டி யகாரம் ஆகிய உயிரை வீட்டின்பத்தில் இருத்தும்.பமன்

வாசுதேவர்- ஒரு முனிவர்.உபமனியு தேவர் இவரைச் சிவத்தோடு சேர்த்தவர்.அன்றியும் அவ்வருளே அந்தச் சிவத்திற்குக் குற்றம் தீர்த்த திருமேனியாய் இருப்பதுமாகும்.

வாஞ்சை-விருப்பம்,மோகம். எ-டு வாஞ்சைக் கொடி-உருவகம்.

வாட்டம்-வாடுதல், மலர்ச்சியின்றி இருத்தல். ஆணவ விளைவுகளுள் ஒன்று.

வாடுதல்-மெலிதல்.

வாதம்-வழக்குரை,மறுப்பு உத்திகளில் ஒன்று.பிறர் கூற்றை ஏது காட்டி மறுத்தல்.சமயத்தில் நிகழ்வது.பா.வழக்குரை.

வாதனாமலம்-பயிற்சி பற்றி வந்த மலம்.

வாதனை-துன்பம் ஒன்று உலகத் துன்பம்.மற்றொன்று சமணரால் சைவருக்கு ஏற்பட்ட இன்னல்.

வாதி - தம் கொள்கையை நிலைநாட்ட வாதம் செய்பவர்,

வாதித்தல்- வருத்துதல், வாதம் செய்தல்.

வாதியாபேதி-அஞ்செழுத்து அருளினால் வந்தவாறு உரை செய்பவர்.

வாம தேவம்-மறைவிடம்

வாமநூல் -பெளத்த நூல்.

வாமம், வாம மதம்- சிவம், சத்தி ஆகிய இரண்டில் சத்தியே மேலானது என்று வழிபடும் சமயம்.வேறு பெயர் அசாத்த மதம்.

வாமன அவதாரம் - குறள் வடிவமான திருமால் அவதாரம்.

வாமனன்- திருமால். 10 பிறவிகளுள் குறள் வடிவாய்த்தோன்றிய திருமால்.

வாமன்- 1) சிவன் 2} அருகன்.

வாமி- வாம தந்திரி. எ-டு வாழவே வல்லை வாமி. வாம ஆகமத்தை மேற்கொள்பவன்.

வாய்தல் - அமைதல்.

வாய்த்தல்- நேர்தல், கிடைத்தல்.

வாய்த்த நெறி - அமைந்த விதிப் உருவகம் பயன். மனு நீதி சோழன் தன் மகனைத் தானே தேர்க்காலில் கொல்ல நேர்ந்தது ஊழ்வினைப் பயனே.

வாய்ந்த-சிறந்த.

வாய்பாடு-விதி,கருதலைச் சொற்களாய்க்கூறும் பொழுது, அச் சொல்லமைப்பு அல்லது வாய்பாடு இன்றியமையாத மூன்று உறுப்புகளைக் கொண்டிருக்க வேண்டும் அவையாவன, வாதனை- துன்பம். ஒன்று மேற்கோள்; தான் கொண்ட கொள்கை.ஏது, அக்கொள்கையை நிறுவும் வாயில்.

235