பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாயாதி

வார்த்திகம்


எடுத்துக்காட்டு; அவ்வாயில் நேரிதலாதலை விளக்குவதற்குக் கூறப்படுவது. விளக்கம்; ஒரு மலையின் மேல் புகை எழுவதாகக் கொள்வோம். அங்கே நெருப்புள்ளது என்று துணியப் படுமானால், அதைக் கூறும் முறை பின்வருமாறு 1) இம்மலைதீயைக் கொண்டது. 2) புகையைக்கொண்டுள்ளதால் 3) எங்குப் புகை இருக்கின்றதோ அங்குத் தீயிருக்கும். அடுக்களையில் தீ இருப்பது போல, இக்கூற்றில் மேற்கோள், ஏது எடுத்துக்காட்டு ஆகிய மூன்றும் முறையே அமைந்துள்ளன.

வாயாதி - வாய் முதலிய தொழிற்பொறி.ஒ.பூதாதி

வாய்மை - உண்மை. எ-டு ஒன்றதாகவரும் உரை தந்தவாய்மை

வாயிலார் நாயனார் - வேளாளர் மயிலாப்பூர் தொண்டை நாடு மனத்தைச் செம்பொற் கோயிலாகக் கட்டி, ஞானத்தை விளக்காக ஏற்றி, இன்பத்தைத் திருமஞ்சனமாக ஆட்டி அன்பை அமுதமாகப் படைத்து நாள் தோறும் வழிபட்டு வந்தவர். இலிங்க வழிபாடு (63)

வாயில் - கண் (2), காது (2), மூக்குப் புழை (2), வாய் (1), கழிவாய் (1), மறைவிடம் (1), ஆக9.

வாயில் காட்சி - இந்திரியப் பிரத்தியட்சம். கண் முதலிய 5 பொறிகளையும் அவற்றிற்குத் துணையாய் வலிவுதந்து உடன்நிற்கும் தீ முதலிய 5 பூதங்களையும் அப்பூதங்களுக்குக் காரணமாய் அவற்றை விட்டு நீங்காது உடன் நிற்கும் தன் மாத்திரைகளையும் கொண்டு ஐயம், திரிபு, பெயர் முதலிய விகற்பமின்றி ஒரு பொருளை நிவிகற்பமாய் அறிதலாகும். இதிலுள்ள 6 வகைத் தொடர்புகளாவன;

1)சையோகம், சம்யோகம்; கண்னினால் குடத்தைக் காணல்.

2)சையுத்த சமவாயம், சம்யுக்தி சமவாயம் குட உருவத்தைக் காணல்.

3)சையுத்த சமவேத சமவாயம் சமயுக்த சமவேதசமவாயம் உருவத் தன்மைப் பொதுத் தன்மையைக் காணுதல்.

4) சமவாயம் - செவியால் ஒசையை உணர்தல்.

5)சமவேத சமவாயம் - ஒசைத் தன்மையை உணர்தல்.

6) விசேடண விசேடிய பாவம், விசேடணதா - அபாவத்தைக் (இன்மை) காணுதல். குடம் இல்லது இப்பூதலம்.

வாயு - வளி. இது பத்து வகை. ஊறிலிருந்து தோன்றுவது.

வாயுத்தம்பனை - உயிர்வளி ஒட்டம்.

வாரணம் - யானை.

வாரணன் - கணபதி.

'வார்த்திகம் - பொழிப்புரை. காண்டிகை உரை. சிவஞான போத நூற்பா ஒவ்வொன்றும் முடிந்த பின் அதன் கருத்துரையாகக் கூறப்படுவது. வேறு பெயர் வார்த்திகப் பொழிப்பு, ஒ. சூர்ணிக்கொத்து. மெய் கண்டார் தாம் அருளிய சிவ ஞானபோதத்தின் பொருளைக் கருதல் வழி நிறுவ அதற்குத் தாமே வார்த்திகம் எழுதினார். இப்பொழிவுக்கு முன், கருத்துரை உரைக்கப்படவேண்டும்.

236