பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்த்தை

விசிட்டாத்துவம்


வார்த்தை - சொல்.

வாரிகள் - 1) வாயில்கள் 2) கடல்கள் 3) வார்க்குத்தி.

வாலிசர் - அறிவிலி நிர்ப்பிச தீக்கை பெறும் அறுவரில் ஒருவர். ஏனைய ஐவர் பாலர், முதியோர், பணி மொழியார், பலபோகத்தவர், நோயாளிகள் (சிசிசு 256)

வாழவே வல்லை வாமி - வாமதந்திரியே இவ்வுலகில் எம்மைப் போலவே நீயும் வாழ வல்லாய்.

வாழ்க்கை - வாழ்வு. வாழ்வின் நோக்கம் ஞான வளர்ச்சியே.

வாழ்த்து - கடவுள் வாழ்த்து கூறு மிடத்து வாழ்த்த, வணங்கல், பொருள் இயைபு உரைத்தல் என்னும் மூன்று வகையில் கூறுதல். வாழ்த்துவாம், துதிப்பாம், போற்றுவாம் போன்று வருவன வாழ்த்துதல், வணங்கு வாம், பணிவாம் தொழுவாம் போன்று வருவன வணங்கல், இவ்வாறின்றிக் கடவுள் வடிவம் செயல் பெருமை குறித்துக் கூறப்பொருளியல்பு உரைத்தலாகும். சிவஞானபோத மங்கல வாழ்த்துபொருளியல்பு உரைத் தல் சார்ந்தது.

வாழுலகு அளந்தும் - வாமன வடிவில் வாழ்கின்ற வையகத்தை அளந்தும்.

வாள் - ஒளியாகிய அறிவு. எ-டு கூட்டில் வாள் சாத்தி நின்று உந்தீபற (திஉ 30)

வாள் சாத்தி - திருவருள் பெற்று.

வாள் நுதல் - ஒளி பொருந்திய நெற்றி.

வாறு - போல.

வானகம் - விண், விண்ணகம் ஒ. மண்ணகம்.

வான் கூறு - சுத்தி, அலம்புடை, இடை, பிங்கலை, சுழு முனை, காந்தாரி, குருதை, சங்கினி, சிகுவை, புருடன் என்னும் 10 நாடிகள்.

வான் நாடர் - வானை நாடி இருக்கும் தேவர். எ-டு வான் நாடர் கோமுதலாய் வந்த பெரும்பதத்து (போப 40)

வான் பொருள் - விண் பொருள்.

வானோன் - மேலோன்.

வி

விகற்பம் - வேறுபாடு.

விகற்ப உணர்வு - வேறுபடு உணர்வு, பெயர், சாதி, குணம், கன்மம், பொருள் என ஐந்து இதற்குண்டு.

விக்கிரகம் - கடவுளின் பூசனைக் குரிய வடிவம்.

விகாரம் - வேறுபாடு, திரிபு.

விகாரி - திரிபுள்ளவன், இறைவன்.

விகிர்தி - வேறுபாடு உறுவது. பருவுடலும் உலகும்.

விசர்சனம் - வெளியகற்றல், அன்பினால் உருவத்தில் கட்டுப்படுத்திய இறைவனை மீண்டும் தம் கட்டற்ற நிலைக்குக் கொண்டு வருதல்.

விச்சை - வித்தை கல்வி, அறிவு, மந்திரம் என மூன்று. விச்சையில் தோன்றுவது அராகம்.

விச்வாராத்தியர் - பழைய வீர சைவ ஆசாரியார்.

விசிட்டாத்துவம் - திருமாலை சரணடைதல் என்னும் பாஞ்சராத்திரக் கொள்கை தத்துவத்திரயங்களுள் சித்து, அசித்து என்னும் இரண்டும் ஈசுவரனுக்கு உடனாதலால், அவ்

237