பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வினைக்குஈடாக

வெதிரேகம், வயதிரேகம்


இயல்புகள்: 1) உடம்பாலும் மனத்தின் நினைவாலும் ஆவது 2) வாக்கின் சொல்லாலும் ஆகும் 3) அது பருப்பொருள் 4) தானே அறிந்து அடைத்துப் பயன் தராது. இறைவனே அதினை அறிந்து கூட்டுவிப்பான் 5) ஒருவினை (பாவம்) மற்றொரு வினையை (புண்ணியம்) அழிக்க இயலாது. 6) வினை விதைத்தவன் வினையே அறுக்க வேண்டும். அதாவது வினை பயன் யாரையும் விடாது.

வினைக்குஈடாக - வினைக்குச் சமமாக.

வினையும் உயிர் வடிவமும் - வினைக்கு ஈடாகச் சொர்க்கம் புகுவதாயின், அதற்கேற்ற பூதவுடல், அதுவே, நரகம் புகுவதாயின் அதற்கேற்ற உடல்யாதனா உடல். அதுவே பூவுலகை அடைவதாயின் அதற்கேற்றது பருவுடல்.

வினையும் கலையும் - உலக வினை நிவர்த்தி கலையிலும், வைதிகவினை பிரதிட்டை கலையிலும், ஆத்தியான்மிக வினை வித்தியா கலையிலும், ஆதி மார்க்க வினை சாந்தி கலையிலும், மாந்திரவினை சாந்திய தீத கலையிலும் அடங்கும்.

வினைநோய் - வினைப்பயன். பாவ புண்ணியம். எ-டு நூனங்கள் அதிகம் நோக்கி நுகர்விப்பன் வினைநோய் தீர (சிசிசுப. 111).

வினைமை - வினை உடைமை.

வினை மாற்று - முன் கூறியதற்கு மாறான பொருள்கூறுவது. பா. மொழி மாற்று, மாலை மாற்று. எ-டு சிவஞான போத வெண்பா40இல் "அன்னியம் இலாமை அரற்கு உணர்வு இன்றாம்” என்பதில் உணர்வு இன்றாம் என்பதற்கு மாறாகக் காண்குவன் என்று பொருள் கொள்வது.

வினை முதல் - வினை நிகழ்ச்சிக்குத் தலைமைப்பட்டு நிற்பது கர்த்தா.

வினைவயம் - வினையே தலைமையாக அதன் பால் அமைதல்.

வீ

வீடு - நான்கு பேறுகளில் ஒன்று. ஏனைய மூன்று அறம், பொருள், இன்பம். இது துறவறமாகும்.

வீடுபேறு - முத்தி. இது பற்றியும் சிறந்த உண்மைகளை எல்லாம் தெறிவுற விளக்குவது சிவஞான போதம்.

வீடுபேற்றுக்கு வழி - ஞானமடைதலே .

வீயாத - கேடில்லாத.

வீரம் - 1) 28 சிவாகமங்களுள் ஒன்று. 2) ஒன்பது சுவைகளில் ஒன்று.

வீழ்க்கும் - வீழும்படிச் செய்யும்.

வெ

வெகுளல் - கோபித்தல்.

வெண்ணெய் - திருவெண்ணெய் நல்லூர்.

வெண்ணிது - திருநீறு, சைவ சாதனங்களில் ஒன்று.

வெண்மை - வெள்ளை. ஐவகை நிறங்களில் ஒன்று.

வெதிரேகம், வயதிரேகம் - வேறுபாடு, எதிர்மறை ஒ. அன்னு வயம்.

243