பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வைப்பு முறை

வைரவன்


பதி, பாசம், பசு என எடுத்து பசு, பாசம், பதி என முடிக்கப்படுகிறது. இதே முறை சிவஞான சித்தியார் சுபபக்கத்திலும் பின்பற்றப்படுகிறது. ஆனால், சிவப்பிரகாசத்திலும் திருவருட்பயனிலும் பதி,பசு, பாசம் என்று வைப்பு முறை உள்ளது.உண்மைவிளக்கத்தில் பாசம், பசு, பதி என்னும் வைப்புமுறை காணப்படுகிறது. இம்முறை தெரிந்ததலிருந்து தெரியாததற்குச் செல்வதால் புரிந்து கொள்வது எளிது.

வையகம் - உலகம்.

வைரவம் - வைரவக் கடவுளை வணங்கும் சமயம்

வைரவன் - 1) வைரவ சமயத்தினன் 2) வைரவக் கடவுள்.


 

247