பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனாகதம்

அனுமானவகை


அனாகதம் - ஆதாரம் 6 இல் ஒன்று அனாதி,

அநாதி- ஏகாந்தம் எடு அனாதி சிவனுடைமை (திப 43)

அனாதி சைவம் - சைவம் 16 இல் ஒன்று.

அனான்ம வாதம் - ஆன்மா இல்லை என்னுங்கொள்கை

அனிசுவரவாதி - நாத்திகன்.

அனுக்கிரகம்-இறைவன்அருள்.

அனுட்டயம் - செயல். எ-டு ஆன்மகன்ம அனுட்டயங்கள் (சிசிபட 232)

அனுபந்தம் - பட்டறிவின் வழியது. ஆணவம் கன்மம் வழி வருதல்.

அனுபவம் அனுபூதி - பட்டறிவு, நுகர் அறிவு, இறையறிவு, பட்டறிவால் உணரும் பொழுதே பொருளின் உண்மை இயல்பு விளங்கும். எ-டு பிறியா அனுபூதிகம் தனக்காய் (சிசி பப221).

அனுபவப் பிரமாணம் - பா.உரையால் அனுமானம். அனுபவித்தல் - நுகர்தல்.

அனுபோகம் - பயன், நுகர்ச்சி. எ-டு தானே தானாய் அனு போகம் (சிசி பட 233)

அனுமானம் - கருதல், உய்மானம் அளவை8 இல் ஒன்று.

அனுமான உறுப்புகள் மூன்று -மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு, சிவஞான போதத்தில் ஒவ்வொரு நூற்பாவிற்குரிய அதிகரணத்தில் இது உள்ளது.

அனுமானப்பிரமாணம் - கருதல், அளவை உய்மான அளவை. பிரமாணங்களில் சிறந்தது. மெய்கண்டார் பயன் படுத்துவது.

அனுமானப்பிரமாண விளக்கம் - காரியத்தைக் கொண்டு காரணம் உண்டு என்று உறுதி செய்வது. காணப்படுகின்ற உடம்பின் போக்குவரத்தாகிய காரியத்தைக் கொண்டு இக்காரியங்களின் நிகழ்ச்சிக்கு உடல் என்றல்கூடாது. ஆகவே, காரணமாகிய உயிரை இவ்வுடம்பு கொண்டிருக்க வேண்டும் என உறுதி செய்யப்படுதல் எ-டு. மாயா இயந்திரதனுவில் ஆன்மா, இங்கு உயிர் காணப்படாத பொருள். அதை உண்டென்று சாதிக்கக் கருதல் அளவை பயன்படுதல்.

அனுமான் - சிரஞ்சீவியர் எழுவரில் ஒருவர்.

அனுமானனுமானம் - காட்சிக்குப் புலனாகாதது. கருத்துக்குப் புலனாகும் பொருள்களை அறிவது வேறு பெயர் வசன லிங்கப் பிரமாணம். மேலும், ஒருவன் பேசுவதைக் கொண் டும் அவன் அறிவு எத்தகையது என்று மதிப்பிட உதவுவது.

அனுமான வகை -1. இருவகை:

i தன்பொருட்டு, பிறர் பொருட்டு, தான் அறியவும் தான் அறிந்ததைப் பிறர் அறியக் கூறவும் முறையே இவை நிகழ்கின்றன. ii கேவல அன்வயம் (உடன்பாடு), கேவல வயதிரேகி அல்லது வெதிரேகம் (எதிர்மறை) மூவகை : சிவஞான சித்தியார் கூறுவது.

1. பூர்வக்காட்சி அனுமானம். நாற்றத்தால் போது அறிதல்.

2. கருதல் அனுமானம்: ஒதும் உரையால் அறிவின் அளவு உணர்தல்.

32