பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆகமம் 28


ஆ-ஆன்மா,சிவஞானம்,தலைக்குறை.

ஆக-தற்பொருட்டு.

ஆகந்துகம்-பின்வந்தது.சகசத்திற்கு எதிரானது,ஆன்மாவிற்கு மாயை கன்மங்கள் ஆகந்துக மலமாகும்.

ஆகம்-உடல்.எ.டு.தொள்ளை கொள். ஆகம் (சிசி பப178) .

ஆகமம் -உரை.அளவை ஏட்டில் ஒன்று.

ஆகம அளவை - பா. ஆகமப் பிரமாணம்.

ஆகமங்கள் - 1. பொருள் :முதல்வன் திருவாய் மொழிகளான அற நூல்கள். இவை தந்திர நூல்கள். 2.வகை : சைவ ஆகமம்,வைணவ ஆகமம், சாத்தாகமம் உபாகமம் என நால்வகை சிவ வழிபாட்டைச் சிவாகமமும் திருமால் வழிபாட்டை வைணவமும் சத்தி வழிபாட்டைச் சாத்தாக மும் கூறும்.வைணவ ஆகமங்கள் பாஞ்சராத் திரம்,வைகானசம் என இருவகை சைவாகமும் 28 வகை. 3.தத்துவம் : ஆகமங்கள் சதா சிவ மூர்த்தியினது ஈசான முகத் தினின்று தோன்றின.தத்துவ வடிவ மாகிய மறைமொழிகள் (இரகசியம்),சிலைகள் (மூர்த்திகள்)ஆலயங்கள்,பூசை ஆகியவற்றின் உண்மைப்பொருள்கள் இவற்றால் உணர்த்தப் படுவன. 4.பெயர் : இவை மந்திரமெனவும் தந்திரமெனவும் சித்தாந்த மெனவும் பெயர் பெறும்.

5. பாதங்கள்:இவை ஞானபாதம்,யோக பாதம், கிரியா பாதம்,சரியா பாதம் என நான்கு "படிகளைக் கொண்டவை.

6.நுவல் பொருள்:ஞான பாதம் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் உண்மை இயல்பை உணர்த்துவன.யோகபாதம் பிராணாயாமம் முதலிய உறுப்புகளையும் சிவ யோகத்தையும் உரைப்பது. கிரியாபாதம் மந்திரங்களின் உத்தாரணம், சந்தியாவந்தனம்,பூசை வழிபடல், ஓமம், சமய விசேட நிருவான ஆசாரியா பிடேகங்களையும் உரைப்பது. சரியாபாதம் கழுவாய், சிராத் தம், சிவலிங்க இலக்கணம் முதலியவற்றை உரைப்பது. வைணவ ஆகமமான பாஞ்ச ராத்திரம் பூசா விதியையும் வைகானசம் துறவறம் முதலிய ஒழுக்கங்களையும், யோக ஞானசித்திகளையும் கூறுபவை. பா:வேதம். மூல நூலும் வழி நூலும் : மூலாகமங்கள் 28. இவை மூல நூல்கள். நாரசிங்கம் முதல் விசுவகன்மம் வரையுள்ள உபாகமங்கள் 207. இவை வழி நூல்கள். சைவர்க்கு இவை இரண்டும் மூல நூல்களே.

ஆகம ஞானம் -அபர ஞானம், பர ஞானம் என இருவகை.

ஆகமம் 28-1. காமிகம் 2 யோகஜம் 3. சிந்தியம் 4. காரணம் 5.அசிதம் 6. தீப்தம் 7 சூக்குமம் 8. சகச்சிரம் 9 அஞ்சுமான் 10. சுப்பிரபேதம் 11விசயம் 12.நிச்சு வாசம் 13. சுவாயம்புவம் 14.

34