பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசனம்

ஆணவம்


 ஆசனம்-1) யோகப் பயிற்சி 2) இருக்கை. இதில் அமர்ந்து வழிபடல்

ஆசனங்கள் 20 - 1.பத்மாசனம் 2. சித்தாசனம் 3 சுவஸ்திகாசனம்4. சுகாசனம் 5.சிரசாசனம் 6. சர்வாங்க ஆசனம் 7. மத்சா சனம் 8 புயங்காசனம் 9. தனுர் ஆசனம் 10, மயூரா ஆசனம் 1. திரிகோணாசனம் 12 சவா சனம் 13. அர்த்த மத்சியேந்தி ராசனம் 14 ஆலாசனம் 15 சல பாசனம் 16. பச்சி மோத்தான சனம் 17:யோகமுத்திரா 18.பாத அத்தாசனம் 19 உட்டியானா 20. நெளலி.

ஆசிரமம் - பிரமசரியம், கிரகத்தம், வானப்பிரத்தம், சந்நியாசம் என நான்கு

ஆசாரம் - ஒழுக்கம், சீலம்,

ஆசாரியார் - ஒழுக்கமுள்ளவர், சீலர். தீட்சா குரு, வித்தியா குரு என இருவகை ஆசான் முர்த்தி - குருமூர்த்தி ஆசிரியர்-ஆசான், ஐங்குரவரில் ஒருவர். உரையாசிரியர், நூலா சிரியர், போதகா ஆசிரியர் என மூவர்.

ஆசினி - வான்

ஆசீவகன்-சமணத்துறவி.

ஆசீவகன் மதம்- சமண சமயம்

ஆசு - குற்றம், இருள், அஞ்ஞானம், ஆணவம்

ஆசை -அவா. 5 குற்றங்களில் ஒன்று

ஆஞ்சை-ஆதாரம் 6 இல் ஒன்று

ஆடகம் - பொன்.அணிகலன் தருவது ஆடகம்.

ஆடக அணிகலன்கள்- சூடகம், கடகம், மோதிரம், சவடி, தொடர், ஆரம், முடிதாடு, நாண் (சிசி பப 258)

ஆடலார்-ஆடுவோர்.அகன்பதி வதிவோரில் ஒருவர் (நெவிது 100)

ஆடவர்குணம் - 'அறிவு, நிறை,ஒர்ப்பு, கடைப்பிடி என நான்கு

ஆடுஉஅறிசொல்-ஆண் பாலை உணர்த்தும் சொல்.

ஆணவம்-வேறுபெயர்: பாசம்,மூலமலம், ஆணவமலம், சகசம். இயல்புகள்:1.அறிவை கேவல சகலநிலைகளில் மறைப்பது.அதாவது,அறியாமையை விளை விப்பது.இது இதன் தனிஇயல்பு 2. ஆற்றல் பல 3.அனைத்துத் துன்பத்திற்கும் காரணம் 4.இஃது ஒன்றே 5.இஃது உயிரின் பெற்றி அன்று: அதற்குப் பகையே 6.வீடுபேறு என்னும் நிலையில் மட்டும் நீங்குவது. 7 அனாதி அந்தம் அடையாது. இலக்கணம் - இது பொது, சிறப்பு என இருவகை முன்னதில் சகலத்தில் கருவிகளோடு கூடிய நிலையில் விபரீத உணர்வை உண்டாக்குவது பின்னதில் கேவலத்தால் உயிருக்கு அறியாமையை உண்டாக்குவது. உவமை - ஆணவம் உமி. மாயை தவிடு. கன்மம் முளை. வகை : மும்மலங்களில் முதல் I Dool)f D.

ஆற்றல் ஆவாரகம், அதோ நியாமிகம் என்னும் இரு ஆற்றல்கள் உண்டு. முன்னது உயிர்களை மறைப்பது, இஃது ஆணவத்தின் தன்னியல்பு. பின்னது பிறவற்றோடு சேர்ந் துள்ள நிலை. முன்னது முழு இருள். பின்னது மங்கல் ஒளி.

36