பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணவ மலபரிபாகம்

ஆத்திகர்


 வன்மை மென்மை: ஆணவம் சகலரிடத்துப் பருமையாகவும் பிரளயாகலரிடத்து நுண் மையாகவும் விஞ்ஞானகலரிடத்து மிக நுண்மை யாகவும் இருக்கும். மல காரியங்கள் 7 : 1. மோகம் 2. மதம் 3, தாபம் 4 இராகம் 5. கவலை 6. வாட்டம் 7. விசித்திரம் மல காரியங்கள் 8:1 விகற்பம் 2. குரோதம் 3 மோகம் 4. கொலை 5 அஞர் 6, மதம் 7. நகை 8. விராய் (இஇ 4) கொள்கை ஆணவம் உண்டு என்பது உண்மை.அதற்குரிய பல வழக்குரைகளும் உள்ளன.ஆணவத்தோடு ஆன்மாஅத்து விதமாய் இருத்தல் பந்தம் எனப்படும்.அது நீங்கி இறைவனோடு அத்துவிதம் ஆதல் முத்தி எனப்படும். நீக்கம்:காரணகாரிய ஆராய்ச்சியாகிய நீரால் ஆணவமாகிய மலத்தைக் கழுவ வேண்டும். இதற்குத் திருவருள் துணை நாட வேண்டும்.

ஆணவ மலபரிபாகம் -தனு,கரணம் முதலிய மாயா மலத்தோடு ஆன்மா சேர்ந்தாலே பக்குவப் படும்.படைப்பு செய்வது அதன் பொருட்டே இதனைக் கழிக்க வேண்டும் என்பதே மெய்கண்டார்வாக்கு “செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா அம்மலம் கழிஇ அன்பரோடு மரீஇ' - (சிபோநூபா.12)

ஆண்டவன் - இறைவன்.

ஆண்டான் அடிமை - இறைவன் ஆண்டான். உயிர் அடிமை.இது சைவ சித்தாந்தத்தின் தலையாய கொள்கை.

ஆணை -இறைவன் ஆற்றல்

“ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும் (சிபோநூபா 2) ஆணையும் முதல்வனும் இரு வினைப் பயனை முதல்வன் நேரே உயிருக்கு ஊட்டாது ஆணை யாகிய தன் சிற்சத்தி மூலம் ஊட்டுகின்றான். வினையோ அறிவில்லாதது.உயிரோ தான் செய்த வினைப் பயனை அறிந்து ஏற்றுக் கொள்ளாதது. ஆதலால்,இவ்விரண்டினையும் சேர்த்து நுகர் விப்பது ஆணையேயாம்.ஆணை என்பது முதல்வனின் சிற்சத்தியே. முதல்வன்வேறு; சத்திவேறு என்பதல்ல. முதல்வனும் சத்தியும் பகலவனும் ஒளியும் போலத் திகழ்பவை.

ஆதல் -உண்டாதல்

ஆதவன் - கதிரவன்.

ஆதனம் - இருக்கை,ஊர்தி

ஆதனமும் ஆதனியும் -இருக்கையும் (ஆன்மா) இருக்கை மேல் (தானு) அமர்ந்த இறைவனும்,எ-டு ஆதனமும் ஆதனியுமாய் நிறைந்து நின்றவனைச் (திப 66)

ஆதாரம் - பற்றுக்கோடு முலா தாரம், சுவாதிட்டானம், மணி பூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்சை என ஆறு.

ஆத்தன் -அருகன்,இறைவன். எ-டு இகலின் ஆத்தன் நாட வேசொலின் (சிசிபப 155).

ஆத்திகர் - கடவுள் நம்பிக்கையுள்ளவர். ஒ. நாத்திகர்

37